இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா உடன் இணைந்து நெடுந்தூரம் இவர் பயணிப்பார் – இளம் வேகப்பந்து வீச்சாளரை வெகுவாக பாராட்டியுள்ள சமிந்தா வாஸ்

0
2072

நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அபிஷேக் ஷர்மா,திலக் வர்மா, உம்ரான் மாலிக் போன்ற திறமை வாய்ந்த இளம் இந்திய வீரர்கள் பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடத்தில் நற்பெயர் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக உம்ரான் மாலிக் நிறைய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இடத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அந்த வரிசையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி வாய்ப்பு கொடுத்தால் அவர் நெடுந்தூரம் பயணிப்பார்

கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து அவரை நான் பார்த்து வருகிறேன் ஒவ்வொருநாளும் அவர் தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றி கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக துல்லியமாக பந்துவீச வேண்டியது அவசியம் அவை இரண்டையும் அவர் கனகச்சிதமாக செய்து வருகிறார்.

இந்திய அணி அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் ஜஸ்பிரித் பும்ரா வுடன் இணைந்து இந்திய அணியில் அவர் விளையாடுவார். இந்திய அணிக்காக நெடுந்தூரம் அவர் பயணிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும் பேசிய அவர் முகேஷ் சவுத்ரி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் மொஹ்சின் கான் போன்ற மற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக விளையாடி வருவதாக வாஸ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் 13 போட்டிகளில் இதுவரை மொத்தமாக 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 20.00 மற்றும் எக்கானமி 8.94 ஆகும்.

இந்தியாவில் சிறந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் வருகின்றனர்

ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மிக சிறப்பாக அதை கையாள்கிறது. நிறைய ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் கிளப்புகள் நிறைய திறமை வாய்ந்த இளம் வீரர்களை நாளுக்குநாள் அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. கடந்த வருடங்களில் இந்தியாவில் இருந்து நிறைய இளம் வீரர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றனர். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதில் சிறப்பாக செயல்படுகிறது என்று சமிந்தா வாஸ் வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.