சூர்யா நீ இந்த பிளானட்ல இருக்கவேண்டிய ஆளே இல்லப்பா… – மிரண்டுபோய் புகழ்ந்த பாகிஸ்தான் ஜாம்பவான்!

0
3280

சூரியகுமார் யாதவின் பேட்டிங் பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், அவரைப் குறிப்பிட்டு புகழாரம் சூட்டி இருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. இதில் சூரியகுமார் ஆடிய விதம் இந்திய அணியின் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 51 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 40 பந்துகளில் 68 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

மேலும் ரன்கள் அடிக்கும் பகுதிகள் யாரும் தொட முடியாத இடங்களில் இருப்பது இவரது பேட்டிங்கிற்கு கூடுதல் பலன் சேர்கிறது. அனைத்தையும் குறிப்பிட்டு சூரியகுமார் யாதவின் பேட்டிங்கை பற்றியும் அவர் ரன் குவிக்கும் விதத்தை பற்றியும் பெருமிதமாக பேசியிருக்கிறார்கள் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் இருவரும்.

“சூர்யாகுமார் யாதவ் வேறு கிரகத்தில் இருந்து வந்தது போன்று பேட்டிங் செய்து வருகிறார். மற்றவர்களைப் போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமான பேட்ஸ்மேன். இவர் பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்ல, மற்ற போட்டிகளிலும் இவர் விளையாடிய விதம். இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றியதோடு மட்டுமல்லாமல், சரியான தருணத்தில் ரன்கள் வந்திருக்கிறது.” என்று புகழாரம் சூட்டினார்