இவர்தான் தற்போது டி20 சிறந்த பேட்ஸ்மேன்; முதல் போட்டி தோல்வி ஒரு தோல்வியே கிடையாது- வெய்ன் பர்னல் அதிரடி கருத்துக்கள்!

0
223
Ind vs Sa

தற்போது இந்திய அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது!

இதற்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட அர்ஸ்தீப் சிங் அணிக்குத் திரும்பினார்.

இந்த நிலையில் தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் போட்டியில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்தத் தொடரில் மட்டுமல்லாது வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரராக முகமத் சிராஜ் அணிக்குள் வந்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தது போலவே, தட்பவெப்ப நிலையும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. பந்து காற்றில் சிறப்பாக ஸ்விங்கானது. முதலில் பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஸ்தீப் இருவரும் இதைப் பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறப்பாக பந்து வீசி, வெறும் எட்டு ரன்களுக்கு தென்ஆப்பிரிக்காவின் முக்கிய 5 விக்கெட்டுகளை பறித்து விட்டார்கள்.

இந்தப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அடித்த 107 ரன்களை தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை அவ்வளவு சுலபத்தில் அடிக்க விடவில்லை. 17 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்தச் அச்சமயத்தில் களத்திற்குள் வந்த சூரியகுமார் யாதவ் அன்றிச் நோக்கியாவின் அதிவேக பந்தில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் விளாசி அதிரடியாக ஆரம்பித்தார். இவர் இப்படி அதிரடியாக விளையாடியது இந்திய அணி இலக்கை நோக்கி நகரவும், உடன் விளையாடிய கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடவும் வழிவகுத்தது. முப்பத்தி மூன்று பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி களத்தில் நின்றார்.

இந்தப் போட்டி பற்றியும், இந்தப் போட்டியில் சூரியகுமார் விளையாடிய விதம் பற்றியும், இந்தப் போட்டியில் தங்கள் அணி செயல்பட்ட விதம் குறித்தும் தென்ஆப்பிரிக்க அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னல் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

சூரியகுமார் யாதவின் பேட்டிங் பார்ம் பற்றி பேசியுள்ள பர்னல் ” நான் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறேன் என்றால், நான் கடந்த இரண்டு மாதமாக பார்த்தவற்றிலிருந்து, டி20 பேட்ஸ்மேன்களில் சூரியகுமார் யாதவ் மிக முக்கியமான சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று நினைக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

மேலும் நடந்து முடிந்த முதல் போட்டியில் தங்கள் அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியுள்ள அவர்
“அதாவது முதல் போட்டியில் நாங்கள் திட்டமிட்டபடி எங்களுக்கு நடக்கவில்லை. இதற்குமுன் விளையாடாத ஒரு புதிய மைதானத்தில் நீங்கள் விளையாடும் பொழுது, அந்த மைதானத்தில் கிடைக்கும் தோல்வி பற்றி நீங்கள் பெரிதாக சிந்திக்கத் தேவையில்லை. எங்களின் பேட்ஸ்மேன்கள் உலகத்தரமானவர்கள். முதல் போட்டி தோல்வி குறித்து இதனால் நாங்கள் எந்த பீதியும் அடைய வேண்டியது இல்லை ” என்று நம்பிக்கையாக தெரிவித்திருக்கிறார்!