அவர் வீட்டிலேயே இருக்கலாம் – முன்னாள் துணை கேப்டன் சர்ச்சை கருத்து

0
698
ICT

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான  முதலாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது . இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில்  பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது . மேலும் இந்திய அணி  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  புள்ளிகள் பட்டியலில்  இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி உள்ளது.

முன்னதாக  இன்றைய நாள் ஆட்டத்தை துவங்கிய  பங்களாதேஷ் அணியில்  கேப்டன் ‘சக்கிபுல் ஹசனைத் தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை . இதனால அந்த அணியானது 324 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இந்திய அணியின் தரப்பில்  ‘குல்தீப் யாதவ்’  மற்றும் ‘அக்சர் பட்டேல்’  ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ‘உமேஷ் யாதவ்’ மற்றும் :முகமத் சிராஜ்’ ஆகியோர் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றி  தொடரில் முன்னிலை  பெற்றுள்ளது.மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு  கேப்டன் ‘ரோஹித் சர்மா’  அணிக்கு திரும்ப இருப்பதால்  இந்திய அணியின் பேட்டிங் இன்னும் வலுப்படும் . ஆனால்  எந்த வீரரை அடுத்த போட்டியில்  அமர வைப்பது என்பதில்  இந்திய அணி நிர்வாகத்திற்கு சிக்கல் உள்ளது .

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில்  கேப்டன் ‘கேஎல்.ராகுல்’ மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர  மற்ற எல்லா டாப்  ஆர்டர்  பேட்ஸ்மேன்களும்  தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர் . இதனால் எந்த வீரரை நீக்குவது  என்பது தலைவலியாக உள்ளது . சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில்  கே.எல்.ராகுல் தான்  சுமாரான ‘ஃபார்மில்’ உள்ளார் . ஆனால் அவர்  அணியின்  துணை கேப்டனாக இருப்பதால்  அணி நிர்வாகம் அவரை நீக்குமா என்பது கேள்விக்குறி தான்.

இதுகுறித்து  இந்திய அணியின்   முன்னாள் துணை கேப்டனும் ஸ்டார் பேட்ஸ்மேனுமான  ‘அஜய் ஜடேஜா’விடம்  கேட்கப்பட்டது . அதற்கு அவர்  “ரோகித் சர்மா  நடக்க இருக்கும் இரண்டாம் டெஸ்ட் போட்டியிலும்  ஓய்வு எடுத்துவிட்டு  புதிய தொடரில்  அணிக்கு வரலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசியுள்ள அவர்  ‘இந்திய அடியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர் . சுப்மண் கில் இந்த போட்டியில் சதம் அடித்துள்ளார் . அவரால் ‘மிடில் ஆர்டரில்’ ஆட முடியும் என்றாலும்  யாரை நீக்கிவிட்டு அவரை ‘மிடில் ஆர்டரில்’ ஆட வைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் .

தொடர்ந்து பேசிய அவர்  “பொதுவாக மணிக்கட்டு மற்றும் கையில் ஏற்படும் காயங்கள்  குணமாக 10 முதல் 15 நாட்கள் தேவைப்படும் . அப்படியே அவை குணமானாலும்  ‘பேட்டிங்’ ஆடும்போது சற்று சிரமமாகத்தான் இருக்கும்  முழு பலத்துடன் ஆட முடியாது . இந்திய அணி நிர்வாகம் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வார் என்றாலும், அவர் ஆடுவது உறுதியாக தெரியவில்லை . இதற்கு பதிலாக அவர்  இந்த டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு எடுத்துவிட்டு  புதிய தொடரில்  முழு உடல் தகுதியுடன்  புத்துணர்ச்சியாக  அணியில் இடம் பெறலாம்” என்று கூறி முடித்தார் .