தோனி மாதிரி.. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் ஸ்மார்ட், கூல் – அஸ்வின் கருத்து!

0
347

ஹர்திக் பாண்டியா ஸ்மார்ட் மற்றும் கூலாக கேப்டன்ஷிப் செய்கிறார் என அஸ்வின் பேசியுள்ளார்.

இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாததால் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு டி20 போட்டிகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக அவர்தான் இனி டி20 கேப்டனாக இருப்பார் என்கிற பேச்சுக்களும் அடிப்படுகின்றன.

- Advertisement -

தற்போது வரை இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. 2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பை வரை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என்கிற பேச்சுக்களும் அடிபடுகின்றன.

டி20 உலககோப்பைக்கு முன்பு அயர்லாந்து அணியுடன் டி20 தொடர், டி20 உலககோப்பைக்கு பிறகு நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இலங்கை டி20 தொடர் அனைத்திலும் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி உள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி வரை அவர் தோல்விகளை சந்திக்கவில்லை. மிக சிறப்பாக வீரர்களை கையாண்டு வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். ஆக்ரோஷமாக இருப்பார். அதே நேரம் தவறு நேர்ந்தது என்பதற்காக வீரர்களை பட்டென்று கோபம் காண்பிக்காமல் கூலாக அணுகுகிறார் என்கிற பேச்சுக்களும் அடிபடுகின்றன.

- Advertisement -

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பொறுப்பு ஸ்மார்ட் மற்றும் கூல் கலந்தவையாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

“ஹர்திக் பாண்டியா மிகவும் ஸ்மார்ட் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரது கேப்டன் பொறுப்பை பார்க்கையில் கூலாக இருக்கிறார். கூல் மற்றும் நிதானமான கேப்டன் இருந்தால் அணியில் நல்ல மனநிலை நிலவும். அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வழியமைக்கும். அவரது கேப்டன் பொறுப்பை பார்ப்பதற்கு இன்னும் ஆவலாக இருக்கிறேன். இதற்கு முன்னர் தோனியிடம் பார்த்துள்ளேன்.” என அஸ்வின் பேசினார்.