இவர் கீப்பிங்கில் தோனி & பேட்டிங்கில் ஆண்ட்ரே ரஸல் ; இளம் இந்திய வீரரை புகழ்ந்துத் தள்ளிய பிரெண்டன் மெக்கல்லம்

0
1614
MS Dhoni and Brendon McCullum

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் ராபின் உத்தப்பாவை மின்னல்வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் ஷெல்டன் ஜாக்சன். தற்பொழுது அவர் குறித்து கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

மகேந்திரசிங் தோனி மற்றும் ரசலுடன் இணைத்து பேசிய பிரண்டன் மெக்கல்லம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஷெல்டன் ஜாக்சன் ஆட்டம் மிக சிறப்பாக மெருகேறி இருக்கிறது. அவருக்கு தற்பொழுது வயது 35 ஆனாலும் அவருடைய ஆட்டம் நாளுக்கு நாள் மிக அற்புதமானது இருந்து வருகிறது என்றும் பாராட்டியுள்ளார். விக்கெட் கீப்பிங் மற்றுமன்றி பேட்டிங்கிலும் சிறப்பாக அதிரடியாக விளையாட கூடிய திறமையை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

விக்கெட் கீப்பிங் செய்வதில் மகேந்திர சிங் தோனி எவ்வளவு வேகமாக செயல்படுவாரோ, அதே போல வேகமாக இவரும் செயல்படுவார். அதேபோன்று பந்துவீச்சாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கீப்பிங் செய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அதேபோல பேட்டிங்கில் அன்ட்ரூ ரசல் எவ்வளவு சிறப்பாக மட்டையை சுழற்றி அடிப்பாரோ, அதே அதிரடி பேட்டிங்கை இவரும் துளியும் குறையாமல் வெளிப்படுத்துவார் என்று பிரண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளார்.

ஷெல்டன் ஜாக்சன் இதுவரை இந்திய அணிக்கு விளையாடியதில்லை. டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அதிக அளவில் இவர் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடினார். பின்னர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் பெங்களூர் அணியிலும், அதன் பின்னர் 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் மீண்டும் கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடினார்.

- Advertisement -

பின்னர் சிறிய இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு முதல் தற்போது கொல்கத்தா அணியில் மீண்டும் ஷெல்டன் ஜாக்சன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது