இதுக்கு மேல அந்த பையன் என்னதான் பண்ணனும்? – பயிற்சியாளர் கபில் பாண்டே கேள்வி!

0
1534

சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளது இந்திய அணி . ஜனவரி 3ஆம் தேதி இலங்கை அணி உடனான டி20 போட்டி தொடர்களில் விளையாட உள்ளது அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடரிலும் ஆட உள்ளது . இலங்கை அணியுடன் சுற்றுப்பயணத்திற்கு பிறகு நியூசிலாந்து அணி உடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது .

வருகின்ற பிப்ரவரி மாதம் தான் இந்திய அணி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது . ஆஸ்திரேலியா அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வருகிறது . இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறுவதற்கு இது முக்கியமான போட்டியாகும் .

சமீபத்தில் பங்களாதேஷில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார் குல்தீப் யாதவ். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் . ஆனால் இரண்டாவது போட்டியில் துரதிஷ்டவசமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . . முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று அடுத்த போட்டியில் அணிகளிடம் பெறாதது பற்றி பல்வேறு தரப்பினரும் அணி நிர்வாகத்தின் மீது விமர்சனம் செய்திருந்தனர்.

தற்போது இது குறித்து பேசி உள்ள குல்தீப் யாதவ் பயிற்சியாளர் கபில் பாண்டே ” குல்தீப் முதல் போட்டியில் நன்றாக பந்து வீசியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டவசமான ஒன்றுதான் . நாம் அனைவருக்குமே இந்திய ஜெயிக்க வேண்டும் என்பதுதான் ஒற்றைக் குறிக்கோள் . அதற்காகத்தான் அணி நிர்வாகம் அணியில் மாற்றம் செய்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது இருந்தாலும் ஒரு வீரர் திறமையாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது பெற்றும் அவரை அடுத்த போட்டியில் விலக்கியிருப்பது கஷ்டமான ஒன்றுதான் என்று கூறினார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் குல்தீப் யாதவ் முதல் முதலாக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார் . மூன்று முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அப்படி இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது அவரது நம்பிக்கையை குறைக்கும் செயலாகும் . தற்போது இருக்கும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் குல்திப்பிற்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் குல்தீப் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தால் தற்போது 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பார் . இந்தியாவில் நடந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் பங்கேற்று இருந்தால் ஒவ்வொரு தொடரிலும் 40க்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார் என்று கூறினார்.

மேலும் அவர் நான் குல்தீபிடம் நீ ஆடும் ஒவ்வொரு போட்டியையும் உன்னுடைய கடைசி போட்டியாக நினைத்து விளையாடு . உன்னால் எவ்வளவு திறமை காட்ட முடியுமா அதை ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுத்தி உன்னை அணியில் இருந்து நீக்க முடியாதவாறு ஒரு சூழ்நிலையை அணி நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் ஏற்படுத்து என்று கூறியதாக தெரிவித்தார் .