“கோலி பெரிய பிளேயர், பயந்து அம்பயர்கள் நோ-பால் ன்னு சொல்லிடறாங்க” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

0
10879

விராட் கோலிக்கு பயந்து நடுவர்கள் நோ-பால் கொடுத்து விடுகிறார்கள் என்று கடுமையாக சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் நோ-பால் அல்லது ஒய்டு குறித்த சர்ச்சை தொடர்ந்து நிலவுகிறது.

- Advertisement -

முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது இருபதாவது ஓவரில் இடுப்பிற்கு மேலே பந்தை வீசியதால் நோபால் கொடுக்கப்பட்டது. அப்போது களத்தில் இருந்தவர் விராட் கோலி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது 16 வது ஓவரை ஹாசன் மஹ்முத் வீசினார். இந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்ஸ் போட்டு விட்டதால், மீண்டும் ஒருமுறை பவுன்ஸ் போட்டபோது, விராட் கோலி நேரடியாக ஒய்டு வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு மறுக்காமல் நடுவரும் ஒய்டு கொடுத்து விட்டார். ஆனால் அது அவ்வளவு பெரிய பவுன்ஸ் ஒன்றும் இல்லை என்பதால் தற்போது இந்த விவகாரமும் பேசுபொருள் ஆகியுள்ளது.

- Advertisement -

இந்த இரண்டையும் விராட் கோலி களத்தில் இருந்தபோது நடந்ததால், விமர்சனம் அனைத்தும் விராட் கோலி பக்கம் திரும்பி, கோலியை கடுமையாக சாடியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ்.

இவர் பேசும்போது, “விராட் கோலி பெயர் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறது. நூலிழை வித்தியாசம் இருக்கும் இடத்தில் அவர் நோ-பால் அல்லது ஒயிடு கேட்டால், அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நடுவர்கள் நேரடியாக கோலிக்கு சாதகமாக முடிவுகளை கொடுக்கின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விராட் கோலி தன்னிச்சையாக செயல்படக்கூடாது. போட்டியில் நியாயதர்மத்துடன் இருக்க வேண்டும்.” என்று விமர்சித்திருக்கிறார்.

ஆனால் இதற்கு மற்றொரு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மாற்று கருத்தை தெரிவித்து இருக்கிறார். “சில நேரங்களில் இதுவா? அதுவா? என்று யோசிக்கும் பொழுது பெரும்பாலும் பேட்ஸ்மேன் பக்கம் நடுவர்கள் சாதகமாக கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுத்திருக்கிறார். இதை விமர்சிப்பது தவறில்லை. அதிலும் வரைமுறை வேண்டும்.” என குறிப்பிட்டதும் இங்கே பதிவிடத்தக்கது.