உலகத்திலுள்ள எந்த அணிக்கும் விளையாடக் கூடிய ஆற்றலை இவர் பெற்றிருக்கிறார் – சுனில் கவாஸ்கர் பெருமிதம்

0
1277
Sunil Gavaskar

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேசமயம் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் திறமையான பந்து வீச்சாளர் என்கிற பெயரை சம்பாதித்துள்ளார். இவர்கள் இருவரைப் பற்றி இந்திய முன்னாள் லெஜெண்ட் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஒரு சில விஷயங்களை அண்மையில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு திசையிலும் சிறப்பாக பந்தை அவர் ஸ்விங் செய்வார்

ஒரு பந்து வீச்சாளர் இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. ஆனால் இதை இதுநாள் வரையில் புவனேஸ்வர் குமார் மிக கச்சிதமாக செய்து வந்தார். அவருடைய வேகத்திற்கு ஏற்றவாறு இல்லை என்றாலும் மீடியம் வேகத்தில் அவர் போலவே இன் ஸ்விங் மற்றும்
அவுட் ஸ்விங் செய்து தீபக் சஹர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கூடுதலாக அவரிடம் எக்ஸ்ட்ரா பேஸ் பந்து வீசும் திறமையும் உள்ளது. இந்திய அணியில் இவரும் இருக்க மறுபக்கம் புவனேஸ்வர் குமார் இருக்க சிறப்பான ஸ்விங் பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி தற்போது நல்ல நிலையில் உள்ளது என்று சுனில் கவாஸ்கர் பெருமையாக கூறியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ராவை மறந்துவிட வேண்டாம்

வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை மறந்துவிட வேண்டாம். அவரிடம் இருக்கும் திறமைக்கு இந்திய அணியில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எந்த அணைக்குச் சென்றோம் அங்கே தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்துக்க கூடிய வல்லமை பெற்றவர்.

ஒரு நாள் டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகை கிரிக்கெட் பார்மேட்டிலும்
தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து அவருக்குத் துணையாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வந்து கொண்டிருக்கின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளதாகவும் சுனில் கவாஸ்கர் பெருமையாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதனை அடுத்து வருகிற 24ம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.