“அவர் சில முட்டாள்தனமான வேலையை செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை!” – மகனை விட்டு கேமரூன் கிரீனை எக்கச்சக்கமாக புகழ்ந்த சச்சின்!

0
292
Sachin

நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது!

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா ஆட்டம் இழந்ததும் இந்த முறை மூன்றாவது ஆட்டக்காரராக கேமரூன் கிரீன் அனுப்பி வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவருடைய ஆட்டத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருந்தது.

- Advertisement -

ஆனாலும் கேமரூன் கிரீன் தன் விக்கெட்டை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டு ஒரு முனையில் நின்றதால் அவர் பக்கம் இருந்து விக்கெட் சரிவுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. அவரைச் சுற்றி மற்றவர்கள் விளையாட கேமரூன் கிரீன் சுதாரித்து இறுதியில் மிகச் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தார்.

நேற்றைய ஆட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்ற கேமரூன் கிரீன் 40 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் குவித்தார். இவரது நிலையான ஆட்டத்தின் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் சேர்த்தது. மேலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட இவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்!

கேமரூன் கிரீனில் இந்த செயல்பாடு குறித்து அணியினருக்கு வீடியோவில் பேசி உள்ள சச்சின் ” இன்று நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். மேலும் நாம் அனைவரும் கேமரூன் கிரீன் இடமிருந்து ஒரே செய்தியைத்தான் பெற்று இருக்கிறோம் என்று உணர்கிறேன். அணியில் உள்ள எவரையும் விட அதிக தூரத்திற்கு பந்தை அவரால் அடிக்க முடியும். அவருக்கு விளையாட்டில் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனாலும் அவர் தன் விளையாட்டில் ஈகோவுக்கு வழி விடவே கிடையாது. ஈகோ என்பது உங்களை எப்போதும் தவறான செயல்களைச் செய்ய ஊக்குவிக்கும் ஒன்று. இந்தத் தவறை கேமரூன் கிரீன் செய்யவில்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சச்சின்
” நமது அணியின் நலன் கருதி அவர் மிக சரியான முடிவை எடுத்தார். அவர் சில முட்டாள்தனமான ஷாட்களை ஆட எளிதில் முயற்சி செய்திருக்க முடியும். அப்படி முயற்சி செய்து அவர் ஆட்டம் இழந்து இருந்தால் யாருக்குத் தெரியும் நம் அணி 192 ரன்கள் எடுத்திருக்க முடியாமலும் போயிருக்கும். இதனால்தான் அவரது முயற்சிக்கு மிகப்பெரிய கைத்தட்டல்கள் கிடைத்ததாக நான் உணர்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!