அது ஷுப்மன் கில் இல்லை; அடுத்த விராட் கோலி அல்லது பாபர் அசமாக இவர் வருவார் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி!

0
1266

அடுத்த விராட் கோலி அல்லது பாபர் அசாமாக வருவதற்கு அத்தனை தகுதிகளும் இந்த வீரரிடம் இருக்கிறது என்று பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்.

சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்பட்டு வரும் விராட் கோலி மற்றும் அவரைத் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வரும் பாபர் அசாம் இருவரும் தங்களது அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்திருக்கின்றனர்.

- Advertisement -

மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பும் பொழுது இவர்கள் நிதானமாக விளையாடி அணிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்நிலையில் விராத் கோலி பாபர் அசாம் போல எதிர்காலத்தில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக்ஸ் வளர்வார் என்று கணிப்பு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரசீத் லத்தீப்.

“கடந்த சில போட்டிகளாக புரூஸ் விளையாடும் விதத்தைப் பார்த்தால் உலகத்தரம் மிக்க வீரர் என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு தொடரில் நன்றாக விளையாடிவிட்டு மற்ற தொடர்களில் சொதப்பும் வீரர்களுக்கு மத்தியில் இவர் ஒவ்வொரு தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்.

பொறுப்புடன் விளையாடுவதை பார்க்கையில் அடுத்த பாபர் அசாம் அல்லது விராட் கோலியாக வளர்வதற்கான அத்தனை தகுதிகளும் இவரிடம் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

புரூக்ஸ் தனித்துவமான வீரர் மூன்று வித போட்டிகளுக்கும் டெக்னிக் வைத்திருக்கிறார். வெகு சில வீரர்களே இப்படி டெக்னிக்கை வைத்திருக்கின்றனர். விராட் கோலி அப்படிப்பட்ட ஒரு வீரர். அவரது திட்டம் மிகவும் எளிமையாக இருக்கும். அனைத்து வித போட்டிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும். என்னவெனில் எதிரணியின் பந்துவீச்சாளர்களை கட்டுப்படுத்த விடமாட்டார். அவர்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுத்து ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வீரராக புரூக்ஸ் தெரிகிறார்.” என்று புகழாரம் சூட்டினார்.

புரூக்ஸ் கடந்த ஒரு ஆண்டாக இங்கிலாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பைக்கு முன்பு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றது. அப்போது அடுத்தடுத்து இரண்டு சதங்கள் மற்றும் 65 பந்துகளில் 80 ரன்கள் உட்பட இரண்டு அரை சதங்கள் என்று ஒட்டுமொத்தமாக அசத்தினார்.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான புரூக்ஸ் முதல் போட்டியில் மூன்று பந்துகளில் டக்அவுட் ஆகி மோசமாக வெளியேறினார். ஆனால் அடுத்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 ரன்கள் அடித்து அசத்தினார். மூன்றுவித போட்டிகளிலும் தற்போது முன்னணி வீரராக இங்கிலாந்து அணிக்கு இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.