” ஒரு ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர்களாக போடக் கூடியத் திறன் கொண்டவர் ” – முன்னாள் சென்னை வீரர் சாம் கர்ரன் பெருமிதப் போச்சு

0
569
Sam Curran

2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி பின்னர் 2020ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியில் அனைவரின் கவனத்தையும் தங்கராசு நடராஜன் ஈர்த்தார். அந்த ஆண்டு சிறப்பாக விளையாடி அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடிய போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக நீண்ட மாதங்களாக அவர் ஓய்வு எடுத்து வந்தார். பூரண குணமடைந்து தற்போது அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஹைதராபாத் அணி அதனுடைய 2வது போட்டியில் லக்னோ அணியிடம் சமீபத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்களை விட தங்கராசு நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்பொழுது தங்கராசு நடராஜன் குறித்து சாம் கரன் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.

ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஆறு பந்துகளும் யார்க்கராக வீசுவார்

தங்கராசு நடராஜன் மிக அற்புதமான பந்துவீச்சாளர். அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவர் பேசும் விதம் மற்றும் அவருடைய பந்துவீச்சில் சற்று ஸ்விங் இருக்கும். கடந்த ஆண்டு புனேவில் அவருக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நான் அவருடைய பந்துவீச்சை எதிர்கொண்டேன்.

ஆனால் அந்த 13 ரன்களை வைத்துக் கொண்டு என்னை மிக சிறப்பாக கட்டுப்படுத்தினார். அவருடைய பந்துவீச்சு மிகவும் சவாலாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளாக வீசும் திறமை அவருக்கு தற்போது உள்ளது. சமீபத்தில் லக்னோ அணிக்கெதிராக நடந்த போட்டியில் லெக் ஸ்டம்பிற்கு யார்க்கர்போட்டு குருனால் பாண்டியாவின் விக்கெட்டை அவர் கைப்பற்றிய விதம் அபாரமாக இருந்தது.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் அவர் போன்ற ஒரு பந்து வீச்சாளரை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள ஆசைப்படும். தற்பொழுது அவர் நல்ல உடல்நிலையில் ஃபிட்டாக இருக்கிறார் அது மிகவும் சந்தோஷம். இவ்வாறு தங்கராசன் நடராஜன் குறித்து இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் வீரர் சாம் கரன் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.