யுவராஜ், சுரேஷ் ரெய்னாவை மிஸ் பண்றீங்களா? கவலை வேண்டாம்; இந்திய அணிக்கு அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்துவிட்டார் – வாசிம் ஜாபர்!

0
8504

2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரரை கவனத்தில் கொள்ளுங்கள் என வாஷிம் ஜாபர் பிசிசிஐ-க்கு வலியுறுத்தியுள்ளார்.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை 1-0 என கைப்பற்றிவிட்டு, ஒருநாள் தொடரை 0-1 என இழந்துள்ளது.

- Advertisement -

இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவருமே இல்லை. ஆனால் அவர்கள் இல்லாத குறையை வாஷிங்டன் சுந்தர் தீர்த்தார்.

முதல் ஒருநாளில் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து சூப்பர் கேமியோ கொடுத்தார். அப்போட்டியில் இவரது பவுலிங் 4.4. மூன்றாவது ஒருநாளில் 121/5 என இந்தியா தடுமாறியது. அத்தருணத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி, மிகவும் பொறுப்புடன் ஆடினார். இறுதியாக அரைசதம்(51) அடித்து அவுட்டானார்.

இரண்டு வித்தியாசமான ஆட்டம், இரண்டு மாறுபட்ட அணுகுமுறையை காட்டி, இளம் வயதிலேயே முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாராட்டுக்கள் குவிகின்றன.

- Advertisement -

2023 ஒருநாள் உலககோப்பைக்கு வாஷிங்டன் சுந்தரை கவனத்தில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க வீரர் வாஷிங்டன் சுந்தர்.

“வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் அசத்தினார். இதற்கு மாறுபட்ட கருத்தே இல்லை. காயத்திற்கு பின் வாஷிங்டன் வெளிப்படுத்திய ஆட்டம் அபாரமானது. உறுதியான மனநிலையை கொண்டிருக்கிறார். முந்தைய காலங்களில் ரெய்னா, யுவராஜ் ஆகியோர் செய்ததை இவர் செய்துள்ளார்.

காயத்திற்கு பின் ஆட்டத்தை நன்றாக மெருக்கேற்றியுள்ளார். தனியாக தெரிந்தது இவரது. மற்ற பேட்ஸ்மேன்கள் சோதப்பியபோது இவரது பேட்டிங்கில் எவ்வித தடுமாற்றமும் தெரியவில்லை. எவ்வளவு பயிற்சி செய்திருக்கிறார் என்று நன்றாக தெரிகிறது.

இவரை இந்திய அணியின் எதிர்காலமாக பாருங்கள். போன ஜெனரேஷன் வீரர்கள் யுவராஜ் மற்றும் ரெய்னா ஆகிய இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் செய்ததை போல வருவார். 2023 உலககோப்பைக்கு இவரை பாதுகாத்து கொள்ளுங்கள்.” என வாசிம் ஜாபர் வலியுறுத்தினார்.