ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இந்த இந்திய வீரர் இருப்பார், அது ரோகித் சர்மா, விராட் கோலி இல்லை – பாகிஸ்தான் வீரர்களுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!

0
104

ஆசிய கோபையில் பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போகிறவர் இந்த இந்திய வீரர் தான் என்று பேசியிருக்கிறார் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா.

ஐக்கிய பிரபு அமீரகத்தில் 15 வது ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறவிருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும் இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, அட்டவணை வெளியிட்ட நாள் முதலிலேயே பெரும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. பலரும் இந்த போட்டிக்கு முன்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்திய அணி, பாகிஸ்தான் அணி, இலங்கை அணி மற்றும் வங்கதேச அணி என ஏறக்குறைய அனைத்து அணிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டன. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாகின் அப்ரிடி துரதிஷ்டவசமாக காயம் காரணமாக ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை. அதே போல் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இரண்டு முக்கிய வீரர்களும் இந்திய அணியில் காயம் காரணமாக இல்லை. இம்முறை இந்திய அணியில் ஆவேஷ் கான், ஹர்ஷதிப் சிங், ரவி பிஸ்னாய் போன்ற இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரவி பிஸ்னாய் அண்டர் 19 – 2020 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மிகச் சிறப்பாக பங்காற்றியதால் பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டார். பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடினார். ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு விரைவாகவே கொடுக்கப்பட்டது. இந்திய அணியிலும் அபாரமாக பந்துவீசி வருகிறார். அக்சர் பட்டேல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, ரவி பிஸ்னாய்க்கு ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவரைப் பற்றி பெருமிதமாக பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இவர் இருப்பார்; கவனமுடன் எதிர்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணியில் பௌலிங் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சகல் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக ரவி பிஸ்னாய் இன்னொரு அணில் கும்ப்ளே போல இருக்கிறார். கூக்ளி, டாப் ஸ்பின் என அனைத்திலும் அபாரமாக செயல்படுகிறார். இவை அனைத்தையும் வேகமாகவும் வீசுகிறார். இது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

அதே நேரம் பாகிஸ்தான் அணியில் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துள்ளார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் மைதானங்களில் பனிப்பொழிவு குறைவாக இருப்பதால் பந்துவீச்சு கடினமாக இருக்கும். பாகிஸ்தான் முழுவதுமாக வேகப்பந்துவீச்சை மட்டுமே நம்பி களமிறங்குகிறது. போதிய அளவு சுழல் பந்துவீச்சுக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஏனெனில் மைதானம் கடினமான சூழலில் இருக்கும் பொழுது ஸ்பின்னர்கள் மட்டுமே ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பர்.” என்றார்.