இவர் மிகப் பெரிய உயரங்களை நோக்கி முன்னேறுகிறார் – இளம் ஐபிஎல் வீரரை பாராட்டி பேசியுள்ள ரவி சாஸ்திரி

0
43
Ravi Shastri

ஐபிஎல் தொடர் என்றாலே இரண்டு முக்கிய அணிகளாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் இவ்விரு அணி ரசிகர்கள் தற்போது மிகுந்த வருத்ததுடன் காணப்படுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 19 வயதான திலக் வர்மா மிக அற்புதமாக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அவருடைய ஆட்டம் மும்பை அணி ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

திலக் வர்மா முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களும், இரண்டாவது ஆட்டத்தில் 33 பந்துகளில் 61 ரன்களும், நேற்று நடந்த முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்துள்ளார். மூன்று போட்டிகளில் மொத்தமாக 121 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பட்டிங் ஆவெரேஜ் 60.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 161.33 ஆக உள்ளது.

திலக் வர்மாவை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ள ரவி சாஸ்திரி

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது 19 வயதான திலக் வர்மா குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறார். “திலக் வர்மாவிடம் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் அவர் பல தரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒரு இளம் வீரர்களுக்கு இருக்கவேண்டிய அமைதி பொறுமை மனோபாவம் மற்றும் உடல்மொழி அவரிடம் மிக சரியான அளவில் இருக்கிறது. எந்தவித அச்சமும் இன்றி தைரியமாக பேட்டிங் ஆடுகிறார். மிகப்பெரிய உயரங்களை நோக்கி முன்னேறும் திறன் இவருக்கு உண்டு”. இவ்வாறு ரவிசாஸ்திரி வெகுவாகப் திலக் வர்மாவை பாராட்டிப் பேசியுள்ளார்.

- Advertisement -

மூன்று போட்டிகளில் தோல்வி கண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய 4வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வருகிற சனிக்கிழமை இரவு 7:30 மணி அளவில் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது