ஒவ்வொரு தொடருக்கும் புதிய கேப்டன் ! ஏன் இவ்வாறு நடக்கிறது ? மௌனம் கலைத்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

0
88
Sourav Ganguly

இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்த எந்தப் பயிற்சியாளர்களுக்கும் நடக்காத வினோத சம்பவங்கள், தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாராய் வந்திருக்கும் ராகுல் டிராவிட்டிற்கு நடக்கிறது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நிகழுவதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்!

என்னவென்றால்; இந்திய அணியின் டைரக்டராக வந்து, பின்பு அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வெளியேறி, விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக, மீண்டும் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்தார்.

- Advertisement -

இவரது பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கொஞ்சம் சறுக்கினாலும், சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் நம்பர் 1 அணியாக வலம் வந்தது. இவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்தி இருமுறை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இரண்டாவது தொடரைக் கைப்பற்றியபோது, இவர் வகுத்த மிடில் அன்ட் லெக் ஸ்டம்ப் லைன் பந்துவீச்சு திட்டம் மிகச்சிறப்பான ஒன்று.

இவரது பயிற்சி காலம் கடந்த ஆண்ட யு.ஏ.இ-ல் நடந்த டி20 உலகக்கோப்பையோடு முடிந்தது. இதற்குப் பிறகு சவுரவ் கங்குலியின் பெரிய வற்புறுத்தலால், இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வந்தார்.

இப்படி இவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முதன் முதலில் முழுமையாகப் பொறுப்பேற்றது, செளத் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போதுதான். அப்பொழுது கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. அவர் இரண்டாவது போட்டியில் முதுகுப் பிடிப்பால் விளையாடாமல் போக கே.எல்.ராகுல் கேப்டனாக வந்தார். அந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்தது. இதற்கடுத்து ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க முடியாததால் கே.எல்.ராகுல் பொறுப்பேற்க, அந்தத் தொடரில் வொய்ட்-வாஷ் ஆனது இந்திய அணி.

- Advertisement -

இதற்கடுத்து இந்தியாவில் நடந்த தொடர்களில் ரோகித் சர்மாவோடு ராகுல் டிராவிட் பணியாற்றினார். அடுத்து ஐ.பி.எல் முடிந்து செளத் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் ரிஷாப் பண்ட் கேப்டனாக அவரோடு பணியாற்றினார். அதற்கடுத்து இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் விளையாட முடியாமல் போக, பும்ரா கேப்டனாக அவரோடு பணியாற்றினார். அடுத்து வெஸ்ட் இன்டீஸ் அணியோடு ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட, அவரோடு பணியாற்ற இருக்கிறார். இப்படி தொடர்ந்து இந்திய அணியின் ஆறு கேப்டன்களோடு பணியாற்ற வேண்டிய வினோத சூழலில் ராகுல் டிராவிட் சிக்கிக்கொண்டார். இதில்லாமல் அயர்லாந்து அணியுடனான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருந்தார். நல்லவேளையாக அந்த அணிக்குப் பயிற்சியாளராக லஷ்மண் இருந்தார்!

தற்போது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பி.சி.சி.ஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலி கூறுகையில் “இவ்வளவு குறுகிய காலத்தில் ஏழு கேப்டன்கள் இருந்தது சிறந்தது கிடையாது. ஆனால் இது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடந்தது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்!