ஸ்பின் பௌலிங்க நல்லா ஆட இத செய்யணும் – வீரர்களை குத்திக் காட்டிய புஜாரா

0
342
cheteswar pujara

இந்திய அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெற்றது. ஏழு வருடங்களுக்கு பிறகு  பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிகளில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ‘பேட்டிங்’ மற்றும் ‘பௌலிங்’ இரண்டிலும்  சிறப்பான பங்களிப்பை  அளித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரவிச்சந்திரன் ‘அஸ்வின்’  ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அரை சதமும்  இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த புஜாரா தொடர் நாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

2020-21 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பின் சரியான ஆட்டங்களை  வெளிப்படுத்த முடியாமல் பேட்டிங்கில் சரிவை சந்தித்த புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ‘கவுன்டீ’ மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து  பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்  புஜாரா. இதனைத் தொடர்ந்து பேசியுள்ள அவர் ” தன்னுடைய ஃபார்ம் மீண்டும் கிடைத்ததற்கு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக ஆடி உள்ளது தான் காரணம்” என்று கூறியுள்ளார்.

இது பற்றி தொடர்ந்து பேசி உள்ள அவர் “இது மிகவும் கடினமான ஒரு தொடர் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. இந்தத் தொடரின் முடிவுகளை வைத்து பார்க்கும் போது ஒரு தலை பட்சமாக இருப்பதாக தோன்றினாலும்  இரண்டு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடி உள்ளன. உள்நாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் ஆடியதும் மேலும் என்னுடைய ஆட்டம் நுணுக்கங்களில் ஒரு சிலது மாற்றங்களை செய்ததும் இந்தத் தொடரில் என்னால் ரன்களை குவிக்க முடிந்தது என்று கூறினார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஒரு டெஸ்ட் போட்டிக்கும்  இன்னொரு டெஸ்ட் போட்டிக்குமிடையே சிறிய காலை இடைவெளி இருக்கும் போது அந்த இடைவெளியானது  போட்டிக்காக மனதளவிலும் தயாராக ஒரு வாய்ப்பைத் தருகிறது  என்று கூறினார் .