ஐபிஎல் பற்றி கேள்விப்பட்டு இருக்கேன்; இப்ப இதுல வாழ ஆசையா இருக்கு! – ஜோ ரூட் பிரமிப்பு பேச்சு!

0
1161
Joe Root

இன்றைய அளவில் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களை விட மிகப்பெரிய தொடராக இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடர்தான்!

இந்த வருடத்துக்கான ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் சென்னை குஜராத் அணிகளுக்கு இடையே ஆரம்பிக்க இருக்கிறது. பதினாறாவது சீசன் இறுதிப் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மே 28ஆம் தேதி நடந்து முடிய இருக்கிறது!

- Advertisement -

கடந்த முறை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்து சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி வென்று இருந்தது. இறுதிப்போட்டியில் குஜராத் அணி உடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி மோதியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் லீக் சுற்றுகளைத் தாண்டி பிளே ஆப் சுற்றுக்களிலும் சிறப்பான ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல் அணி வெளிப்படுத்தியது. ஒவ்வொரு இடத்திற்கும் சரியான வீரர்கள் மற்றும் போட்டிக்கு சரியான வியூகங்கள் என்று அளவான அணியை கொண்டு கலக்கியது.

தற்போதைய பதினாறாவது சீசனுக்கும் நடத்தப்பட்ட மினி ஏலத்தில் ஜேசன் ஹோல்டர் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரை வாங்கி, இருந்த சின்ன குறைகளை அசத்தலாக தற்பொழுது சரி செய்து கொண்டிருக்கிறது. அடுத்து இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை இருப்பதால் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் ஆர்வம் காட்டினார் என்பது மிகக் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஜோ ரூட் தனது அணி குறித்தும் சக வீரர்கள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர்
” நான் உற்சாகமாக நினைக்கும் பெயர்களில் இன்னும் ஒரு பெயர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் நிச்சயமாக ஒரு மேட்ச் வின்னர். இவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறுவது, விஷயங்களைப் பற்றி அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று பார்ப்பது, மேலும் அவர்களுடன் செலவிடும் பொக்கிஷமான நேரங்களான மற்றும் நினைவுகள் மிகவும் அற்புதமானவை!” என்று கூறி இருக்கிறார்.

மேலும் அணியின் இளம் வீரர் ரியான் பராக் பற்றி கூறுகையில் ” அவர் கடந்த ஆண்டு தனது இளம் வயதில் சில முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினார். ஆனால் ஒரு வீரராக அவர் முதிர்ச்சி அடைந்தவர் என்று நான் நம்புகிறேன். இந்தத் தோழர்களை பார்த்து கற்றுக் கொள்வதற்கும், அவர்கள் எப்படி தயாராகிறார்கள் அவர்கள் விளையாட்டை என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்!” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் குறித்து பேசி உள்ள அவர் “நான் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இப்போது அதை வாழ ஆவலுடன் இருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பி தனது ரசிகர்களுடனும் நகரத்துடனும் இணைந்து இருப்பது சிறப்பானது. இந்த அற்புதமான சூழ்நிலையை தழுவி அதன் ஒரு பகுதியாக நாங்களும் இருக்க விரும்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!