ஹர்சித் ராணா vs சிராஜ்.. யார் சிறந்த டி20 வீரர்.. சிராஜ்க்கு ஆசிய அணியில் வாய்ப்பு தரப்படாதது ஏன்? ஆகாஷ் சோப்ரா கருத்து

0
40

2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்ஷித் ராணாவை, நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜுடன் ஒப்பிட்டு, ஹர்ஷித் ராணாவுக்கு சற்று சாதகமாக விஷயங்கள் அமைந்திருப்பதாகக் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா  தெரிவித்துள்ளார். வெறும் ஒரே ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் மட்டுமே  விளையாடியுள்ள ஹர்சித் ராணா, ஆசிய போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிராஜ் சேர்க்கப்படாததற்கு பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது.  சிராஜ், 16 டி20 போட்டிகளில் 7.79 என்ற எகானமி ரேட்டில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், ஹர்ஷித் ராணா, தான் விளையாடிய ஒரே ஒரு டி20 போட்டியில் 4 ஓவர்களில் 3/33 என்ற புள்ளிவிவரத்தைப் பதிவு செய்தார். சமீபத்திய ஐபிஎல் 2025இல் கூட, குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளரான சிராஜ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான ஹர்ஷித்தை விட சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

சிராஜ் தான் பெஸ்ட்:

சோப்ரா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், “இல்லை, சிராஜ் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார். டி20களில் அவர் இன்னும் சற்று காத்திருக்க வேண்டும். ஹர்ஷித் ராணா சிறந்த பந்துவீச்சாளர் இல்லை. அப்படி இருந்திருந்தால், மூன்று வடிவங்களிலும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருப்பார். ஆனால், அவர் வெளியில் உட்கார்ந்திருக்கிறார்.”

” ஹர்ஷித், சிராஜை விட சிறந்தவர் என்றோ, அவரது புள்ளிவிவரங்கள் சிராஜை விட மேலானவை என்றோ நான் கூறமாட்டேன். இந்த நேரத்தில், ஹர்ஷித்துக்கு சற்று சாதகமாக விஷயங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், சிராஜ் சிறந்த பந்துவீச்சாளர். ஒருவருக்கு ஒருவர் ஒப்பீடு செய்தால், நிச்சயமாக சிராஜ் மேல்,” என்றார்.

- Advertisement -

சிராஜின் சமீபத்திய செயல்பாடு:

சிராஜ் கடைசியாக 2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை சுற்றுப்பயணத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடினார். இருப்பினும், கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறார். 2024 செப்டம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் சிறப்பாக செயல்பட்டார்.

இதையும் படிங்க: பாண்டிச்சேரி கிரிக்கெட்டை லேசாக எடுத்து கொண்டார்.. வசீம் ஜாபர் அண்ணன் மகனின் ஒப்பந்தம் ரத்து..தந்தை பதிலடி

சமீபத்தில், 2025 ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் 23 விக்கெட்டுகளுடன் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக விளங்கினார். அதே சமயம் 23 வயதான ஹர்ஷித் ராணா, இதுவரை இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தனது திறமையை இடையிடையே காட்டியிருந்தாலும், இன்னும் தனது முழுத் திறனை நிரூபிக்கவில்லை. ஆசிய போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

- Advertisement -