பெங்களூர் அணி என்னுடைய நலன் கருதி தான் என்னை தக்க வைக்கவில்லை – உண்மையை உடைத்த ஹர்ஷல் பட்டேல்

0
1023
Harshal Patel

ஐபிஎல் தொடரில் 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் பெங்களூரு அணியில் விளையாடி பின்னர் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடினார். 3 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு மீண்டும் பெங்களூரு அணி ஹர்ஷால் பட்டேலை கைப்பற்றியது.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்ஷால் பர்பில் தொப்பியை வென்றார். அது மட்டுமின்றி ட்ரீம் 11 கேம் சேஞ்சர் விருதும், மிக மதிப்புமிக்க வீரருக்கான விருதையும் அவர் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடிய அவர் மீண்டும் இந்த ஆண்டு பெங்களூரு அணி மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பில் படியே மெகா ஏலத்தில் அவரை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூர் நிர்வாகம் கைப்பற்றியது.

- Advertisement -

பெங்களூர் நிர்வாகம் எனக்கு கொடுத்த வாக்கு

பெங்களூர் அணி மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக விராட் கோலி கிளன் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தக்க வைத்திருந்தது. 4-வது வீரராக ஹர்ஷால் பட்டேலை தக்க வைக்க வேண்டும் என்றால் அவருக்கு ஆறு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் பெங்களூரு அணியின் இருப்புத் தொகையில் இருந்து கூடுதல் 3 கோடி ரூபாய் இணைந்து மொத்தமாக 9 கோடி ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும்.

இதை புரிந்துகொண்ட பெங்களூரு அணி நிர்வாகம் அவரிடம் தனியே அழைத்து நிச்சயமாக மெகா ஏலத்தில் அவரை கைப்பற்ற பெங்களூர் நிர்வாகம் முயற்சி செய்யும் என்று வாக்கு கொடுத்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதை அவரும் உறுதி செய்துள்ளார்.

இது சம்பந்தமாக பேசிய அவர் பெங்களூர் நிர்வாகம் தன்னிடம் பேசிய வார்த்தைகளை வெளிப்படையாக கூறியுள்ளார்.”9 கோடி ரூபாய் இருப்புத் தொகையில் இருந்து எடுக்கப்பட்டு வெறும் 6 கோடி ரூபாய் உனக்கு தருவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே மெகா ஏலத்தில் முடிந்தவரை உன்னை நாங்கள் கைப்பற்ற முயற்சிப்போம். கூடுதல் தொகை என்றாலும் அது முழுவதுமாக உனக்கு போய் சேர வேண்டும் எனவே உன்னை நாங்கள் மெகா ஏலத்தில் கைப்பற்றுவோம்” எனறு தன்னிடம் வாக்கு கொடுத்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

பெங்களூர் நிர்வாகம் அளித்த நம்பிக்கையின்படி அவரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றிவிட்டது. இந்த நெகிழ்ச்சியான செய்தியை பெங்களூர் அணி ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரும் நிகழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.