இந்த 3 வீரர்களையும் ஹாட்ரிக் விக்கெட்டாக எடுக்க விரும்புகிறேன் – ஹர்சல் படேல் ஆசை

0
374
Harshal Patel RCB

2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்திற்காக வீரர்கள் தக்க வைக்கப்பட்டதிலும், வீரரை வாங்கியதிலும் விந்தையான ஒரு விசயமாக இருந்தது யாரென்று பார்த்தால் அது பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல்தான்!

கடந்த சீசனில் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்பிள் தொப்பியை வாங்கியவரை எதற்காக பெங்களூர் அணி தக்கவில்லை? பின்பு ஏன் ஏலத்தில் அதிக விலையைக் கொடுத்து வாங்கியதென்பது புரியாத விசயம்தான்.

ஆனால் பின்பு தனக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றுதான், பெங்களூர் தன்னை விடுவித்து வாங்கியதாகவும், தனக்குப் பணம் பொருட்டில்லை என்றும் ஹர்சல் படேல் கூறியிருந்தார். எந்த அணியும் ஏலத்திற்கான பணத்தைத் தேவையில்லாமல் இப்படியான காரணங்களுக்காகச் செலவிடாது என்பதுதான் உண்மை.

தற்போது கிரிக் இன்போவிடம் பேசிய அவர் என்றுமே நிறைவேற வாய்ப்பில்லாத தன் பெரிய ஆசை ஒன்றை கூறியிருக்கிறார். என்னவென்றால்; விராட் கோலி, ரோகித் சர்மா, ஏ.பி.டிவிலியர்ஸ் மூவரையும் ஹாட்ரிக் விக்கெட்டாக எடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார் இந்த குஜராத்தை சேர்ந்த 31 வயதான வேகப்பந்து வீச்சாளர்!