தங்கை திடீர் மரணம் ; பெங்களூரு அணியில் இருந்து வெளியேறிய ஹர்ஷால் பட்டேல்

0
11744
Harshal Patel Sister

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக பந்துவீசி மொத்தமாக 32 விக்கெட்டுகளை ஹர்ஷால் பட்டேல் கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பர்ப்பிள் நிற தொப்பியும், ட்ரீம் 11 கேம் சேஞ்சர் விருதும், மிக மதிப்பு மிக்க வீரர் விருதையும் இவர் வென்றார்.

கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய காரணத்தினால் மீண்டும் பெங்களூரு அணி இவரை பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் கைப்பற்றியது. 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இவரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐபிஎல் தொடரிலும் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். நான்கு போட்டிகளில் மொத்தமாக இதுவரை 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

நேற்றைய போட்டியில் மும்பை அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டை ஹர்ஷால் பட்டேல் கைப்பற்றிய பின்னரே ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறும் ஹர்ஷால்

- Advertisement -

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடந்து முடிந்ததும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்தது. ஹர்ஷால் பட்டேலின் சகோதரி இறந்த செய்தி ஹர்ஷால் பட்டேலுக்கு நேற்று போட்டி முடிந்ததும் தெரியவந்தது.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க விரும்பிய ஹர்ஷால் பட்டேல் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி உள்ளார். ஒருநாள் தன்னுடைய குடும்பத்துடன் இருந்து அவர்களை ஆறுதல் படுத்திய பின்னர் மீண்டும் பெங்களூரு அணியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு அணிக்கு அடுத்த போட்டி வருகிற 12-ஆம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்றது. அந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஹர்ஷால் பட்டேல் மீண்டும் பெங்களூரு அணியின் பயோ பபுளில் இணைந்து கொள்வார் என்று தற்போது தெரியவந்துள்ளது.