போலி ஃபீல்ட்டிங் செய்தாரா விராட் கோலி? 5 ரன் குடுக்கணுமா? – டக்கரான பதில் கொடுத்த ஹர்ஷா போக்லே!

0
1719

பேட்ஸ்மேன்களை குழப்புவதற்கு விராட் கோலி போலியான பீல்டிங் செய்தார் என்ற விமர்சனத்திற்கு தெளிவான பதில் கொடுத்து இருக்கிறார் ஹர்ஷா போகலே.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தியா 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், பவர்-பிளே ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். 7 ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து ஆட்டம் தடைபட்டது. இதற்குப் பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 16வது ஓவரில் வங்கதேச அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதனை கட்டுப்படுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் போது பந்து பவுண்டரி திசை நோக்கி சென்றது. அதை அர்சதீப் சிங் தூக்கி எறிந்தார். அப்போது இரண்டு ரன்கள் ஓடிக்கொண்டிருந்த வங்கதேச வீரர்களை ஒரு ரன்னாக மாற்ற, விராட் கோலி பந்தை கையில் பிடித்தது போலவும் அதை ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் போலியாக பாவனை செய்தார்.

இதை பிடித்துக் கொண்ட வங்கதேச வீரர்கள், இது பேட்ஸ்மேன்களை திசைதிருப்பும் வேலை. இடையூறு செய்யும் விதிமுறையின் படி இதற்கு ஐந்து ரன்கள் கொடுத்தாக வேண்டும் என நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் விராட் கோலி தவறுதலாக எதுவும் செய்யவில்லை என்று நடுவர் தீர்ப்பு கொடுத்தார். இதைப் பிடித்துக் கொண்டு ஐந்து ரன்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று புலம்பி இருக்கிறார் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்.

- Advertisement -

வங்கதேச அணி முன்வைத்து வரும் இந்த வீனற்று விமர்சனத்திற்கு தெளிவான பதில் அளித்திருக்கிறார் நட்சத்திர வர்ணனையாளர் ஹர்ஷா போகலே. “போலியாக ஃபீல்ட்டிங் செய்தார் கோலி என்று முன் வைத்திருக்கும் விமர்சனத்திற்கு நான் இங்கே பதில் கூற விரும்புகிறேன். உண்மையில் அவர் அப்படி செய்ததை பேட்ஸ்மேன்கள் மற்றும் நடுவர்கள் அப்போது பார்க்கவில்லை. பார்த்திருந்தால் களத்தில் இருக்கும் பொழுதே கேட்டிருப்பார்கள்.

ஐசிசி வகுத்திருக்கும் விதிமுறையில் போலியான ஃபீல்ட்டிங் தவறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் போட்டி நடக்கும் பொழுது நடுவர்கள் அதில் தலையிட்டு ஐந்து ரன்கள் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில் யாரும் பார்க்கவில்லை.

அடுத்ததாக மைதானத்தின் ஈரப்பதம் பற்றி சகிப் அல் ஹசன் நடுவர்களிடம் குறை கூறினார். மழைக்கு பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்போது மட்டுமே பேட்டிங் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அது உண்மைதான். அதே நேரம், கடைசி வரை நடுவர்கள் மற்றும் சில அதிகாரிகள் போட்டியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதை அவர்கள் சரியாக செய்தார்கள். பேட்டிங் செய்ய ஒப்புக் கொண்டுதான் வங்கதேச அணியும் களமிறங்கியது.

கடைசியில் தோல்வி அடைந்து விட்டனர். ஆகையால் அதற்கு காரணங்களை தேடி வருகின்றனர். போலியான ஃபீல்ட்டிங் மற்றும் மைதானத்தின் ஈரப்பதம் இரண்டும் காரணமாக கிடைத்திருக்கிறது என்றார்.