மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கும் 11 வீரர்கள் பட்டியல் இதுதான் – ஹர்ஷா போக்லே கணிப்பு

0
127
Harsha Bhogle and Rohit Sharma

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் இம்முறை நடக்கப்போவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். முதல் போட்டி அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று (மார்ச் 27ம் தேதி) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இரண்டாவது போட்டி அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று முப்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே. 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது. கடந்த ஆண்டு ஹாட்டிரிக் கோப்பையை அந்த அணி வெல்லும் என்று நினைத்து நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் ரசிகர்களை ஏமாற்றியது.

புதிய வீரர்களுடன் களமிறங்க இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து ரசிகர்களும் இருக்கின்றனர். நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் அந்த அணியில் இடம் பெற்று விளையாடப் போகும் சாத்தியமான 11 வீரர்கள் யார் யார் என்று தற்பொழுது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்துக் கூறியுள்ளார். அவர் கூறிய 11 வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்

ஓபனிங் வீரர்கள் :

ஓபனிங் வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் ஓபனிங் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள்

மூன்றாவது இடத்தில் புதிய இளம் வீரர் திலக் வர்மா இடம் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 144 என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் எப்பொழுதும் போல சூரியகுமார் யாதவும், ஐந்தாவது இடத்தில் எப்பொழுதும் போல கீரோன் பொல்லார்ட் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்ரவுண்டர் வீரர்கள் :

ஆறாவது இடத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் இடம் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163 ஆக உள்ளது. அதே சமயம் ஒரு சில ஓவர்கள் சிறப்பாக பந்து வீச கூடிய திறமையும் பெற்றிருக்கிறார். ஏழாவது இடத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டானியல் சாம்ஸ் மற்றும் 8வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்பின் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சஞ்சய் யாதவ் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாட கூடியவர்கள்.

பந்து வீச்சாளர்கள்

பந்து வீச்சாளர்கள் ஆக ஒன்பதாவது இடத்தில் முருகன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இவர் ஸ்பின் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடக் கூடிய திறன் பெற்றவர். 10வது இடத்தில் எப்போதும் போல ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். 11 ஆவது வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆர்ச்சர் இருவரும் இணைந்து விளையாடினால் அந்த போட்டியை எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

ஹர்ஷா போக்லே தேர்ந்தெடுத்த மும்பை அணியின் 11 வீரர்கள் :

ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரோன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர்