கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஹர்ஷா போக்லே அறிவித்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி – குல்தீப் யாதவுக்கு இடமில்லை

டி 20 உலகக் கோப்பை நடைபெற என்று மூன்று மாதங்களே உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டி 20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணியை கிரிக்பஸ் லைவ் நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார். அவரது அணியில் கேஎல் ராகுல்,ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். அவர்களை அடுத்து வரும் வீரராக இஷான் கிஷன் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் போட்டி நிலவும் என்று குறிபிட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை இழந்தது இத்தொடரில் முன்னணி வீரர் குல்தீப் யாதவ் போதிய அளவு பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இவர்களைக் காட்டிலும் இளம் வீரரான வருன் சக்ரவர்த்தி சிறப்பாக விளையாடி உள்ள நிலையில் அவர்களுக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் . அதே போல் ஐ.சி.சி சார்பில் நடத்தும் தொடர்களின் நாயகன் தவானின் தற்போதைய பார்ம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் ஹர்ஷா போக்லே தவானை தனது உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை .

Photo: BCCI

இவர்களை அடுத்து ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் இந்திய அணி ஆல்-ரவுண்டராக திகழ்வார்கள். இந்திய அணியை பொறுத்த வரை யுஹேந்திர சஹல் , வருண் சக்ரவர்த்தி ஆகிய இரண்டு ஸ்பின்னர்களும் இடம்பெற்றுள்ளனர். டி 20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவை தேர்வுசெய்யவில்லை ஹர்ஷா போக்லே இது இளம் வீரர்களை அதிகம் நம்புவதற்க்கான சான்றாகும்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி 20 தொடரையும் பெரிதாக அவர் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போக்லே தனது அணியில் நான்கு இடங்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என ஒதுக்கியுள்ளார். புவனேஷ்வர் குமார் , தீபக் சாஹர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா. கடைசி இடத்திற்க்கு முகமது ஷமி & நடராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நான்காவது வேகப்பந்து யார் என்ற போட்டி நிலவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஹர்ஷா போக்லேவின் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் (அல்லது) இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ( அல்லது) நடராஜன்.