இந்த 2 வீரர்கள் தங்களது புதிய அணியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டார்கள் – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விளக்கம்

0
245
Harsha Bhogle IPL 2022

கடந்த ஆண்டுகளைப் போன்று இல்லாமல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது. ஏறக்குறைய அனைத்து அணிகளும் தற்பொழுது புதிய வீரர்களுடன் புதிய அணியாகவே காணப்படுகின்றன.

லீக் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை வேறு ஒரு அணியில் விளையாடிய வீரர்கள் தற்போது புதிய அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். அவர்களில் யார் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதே அந்த கேள்வி.

- Advertisement -
இரண்டு இந்திய வீரர்களை குறிப்பிட்டு கூறியுள்ள ஹர்ஷா போக்லே

புதிய அணையில் தற்போது மிக சிறப்பாக செயல்படும் 2 வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் என்று ஹர்ஷா போக்லே பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய உமேஷ் யாதவ் அவருடைய அடிப்படை தொகையான இரண்டு கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி மூலமாக கைப்பற்றப்பட்டார். அதே சமயம் கடந்த ஆண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி மூலமாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக் தற்போது பெங்களூரு அணியில் மூன்று போட்டிகளில் 90 ரன்கள் மூன்று போட்டியிடும் இறுதி நேரத்தில் வந்து தன்னுடைய பினிஷிங் வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 204.55 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மறுபக்கம் உமேஷ் யாதவ் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரையில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக பர்ப்பில் நிற தொப்பியை தன் கைவசம் உமேஷ் யாதவ் வைத்திருக்கிறார்.

இவர்கள் இருவர் குறித்து பேசியுள்ள ஹர்ஷா போக்லே, “தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக அதிரடியாக விளையாடி வருகிறார். தான் இன்றும் அதே அதிரடி பினிஷர் தான் என்றும், தன்னுடைய ஆட்டம் துளி கூட குறையவில்லை என்பது போல தன்னுடைய பேட்டிங் மூலமாக பதிலளித்து வருகிறார்.

இதற்கு முந்தைய வருடங்களில் உமேஷ் யாதவ் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். மீண்டும் அவர் தன்னுடைய பழைய அணிக்கு இவ்வாறு விளையாடுவது பார்க்க அற்புதமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் தன்னுடைய முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார். என்னை பொறுத்த வரையில் இவர்கள் இருவரும் மிக சிறப்பாக புதிய அணியில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்று ஹர்ஷா போக்லே விளக்கமளித்துள்ளார்