இப்படில்லாம் இருந்தா எவனும் ஒருநாள் கிரிக்கெட் பார்க்க மாட்டான்.. ரூல்ஸ் மாத்துங்க- ஹர்சா கோரிக்கை

0
538

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அயற்சியை ஏற்படுத்தி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தற்போது திரில்லராக மாறி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அதற்கு ஒரு பெரிய சான்று.

- Advertisement -

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. டி20 வருகையால் ரசிகர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பி விட்டதால் ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் டல்லடித்து விட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் மாற்ற வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களில் இருந்து 40 ஓவராக குறைத்து விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 முதல் 40 ஓவர் வரை மிகவும் போர் அடிப்பதாகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ் வைத்து 25 ஓவராக ஒரு நியூஸ் விளையாட வேண்டும் என சச்சின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் குறித்து பேசிய ஹர்ஷா போக்லே கிரிக்கெட் போட்டிகளில் விதியை மாற்ற பி சி சி ஐ  அல்லது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோன்று பவுண்டரி எல்லைக்கோட்டை குறைந்தபட்சம் 70 லிருந்து 75 மீட்டர் அளவு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மைதானங்களிலும் இன்று நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐசிசிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைப் போன்று பவர் பிளேயர் முடிந்தவுடன் பவுண்டரியில் பழைய முறைப்படி 5 பில்டர்கள் நிற்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட பவுண்டரி லைன் வெறும் 55 மீட்டர் என்று அளவிலே இருந்தது. இது மிகவும் குறைவான தூரம் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகம் ஏற்படுகிறது.

இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டை மேற்கொள்ள முடியவில்லை. இதேபோன்று பில்டர்கள் நான்கு பேர் மட்டுமே நடு ஓவர்களில் நிற்பதால் அதுவும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக மாறிவிட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு முனையிலும் இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ரிவர்ஸ் ஸ்விங் அழிந்து விட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் அழிவு பாதையில் சென்று கொண்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து கொள்கின்றனர்.