விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது குறித்தும் அதில் இருந்து மீண்டு வருவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷா போக்லே

0
36
Harsha Bhogle about Virat Kohli

இந்த ஐபில் தொடரில் எந்தெந்த அணிகள் ப்ளே-ஆப்ஸ் போகும்? எந்தெந்த வீரர்கள் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? எந்த அணியின் கேப்டனின் நகர்வு மிகச் சிறப்பாக இருக்கிறது? எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரராகக் கண்டறியப்பட்டுள்ள வீரர் யார்? என்பதையெல்லாம் தாண்டி, வேறொரு விசயம் அலசப்பட்டு வருகிறது.

என்னவென்றால்; இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்ன? செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20/20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் யாரார் சரியான வீரர்களாகளாக இருப்பார்கள்? என்ற விவாதங்கள் தீவீரமாக ஆரம்பித்திருக்கிறது. காரணம் பெரும்பான்மையான இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் பார்ம். குறிப்பாக விராட் கோலியின் பேட்டிங் பார்ம்!

இந்த ஐ.பி.எல் தொடரில் ஒன்பது ஆட்டங்களில் விராட் கோலி அடித்திருக்கும் ரன்கள் 128. சராசரி 16. ஸ்ட்ரைக் ரேட் 119.63. சிறந்த ஸ்கோர் 48. இதில் முக்கியமான விசயம், அவர் பெரும்பாலும் சிறந்த பந்துகளுக்கு ஆட்டமிழக்கவில்லை என்பதுதான். அவரது ஆட்ட அணுகுமுறை, நம்பிக்கை குறைவாய் இருப்பது தெளிவாய் தெரிகிறது.

பல முன்னாள் வீரர்கள் விராட் பார்ம் குறித்து பேசிவரும் நிலையில், பிரபல கிரிக்கெட் வர்னணையாளரும், விமர்சகருமான ஹர்ஷா போக்லே இதுசம்பந்தமாகத் தன் கருத்துக்கள் சிலதை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது “விராட்கோலிக்கு தேவைப்பட்டது இன்னிங்சின் ஆரம்பக்கட்ட அதிர்ஷ்டம் மட்டும்தானா? ஆனால் அவருக்கு சில எட்ஜ்கள் மூலம் அதிர்ஷ்டம் கிடைத்திருந்தாலுமே, அவரால் பவர்-ப்ளேவை தாண்ட முடியவில்லையே. இது நிச்சயம் கவலையான விசயம்தான். இதுப்பற்றி கேப்டன் பாஃப் நேர்மையாகப் பேசியிருக்கிறார். அதில் அவர் ‘எல்லா வீரர்களுக்கும் இந்த நிலை வரும். ஆனால் சிறந்த வீரர்கள் மட்டுமே மீண்டுவருவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்’ என்றிருக்கிறார். நாம் நினைப்பது போலவே விராட்டும் அவர் முறைக்காகக் காத்திருந்து, பேட்டிங்கில் துவக்க வீரராக வந்து சாதிப்பார்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மேலும் பேசிய அவர் “விராட்கோலி மிகச்சிறந்த வீரர் ஏனென்றால் அவர் கிரிக்கெட்டை நன்கு புரிந்திருக்கும் வீரர்களின் வகையைச் சேர்ந்தவர். எனக்கு இதுக்குறித்து எந்த யோசனைகளும் இல்லை. நான் அவருக்கு இயல்பா இருக்கவும், அவர் பெரிய வீரரென்றும் ஞாபகப்படுத்தி அறிவுறுத்தி, அவருக்குத் துணையாய் இருந்து, அவரைச் சூழலை நல்ல முறையில் உணரவைப்பேன். இப்படி நாம் அவருக்குத் துணையாய் இருப்பது, இந்த விசயத்தில் ஏதாவதொரு இடத்தில் மாற்றத்தை உண்டாக்க கூடியதாகவும், அவர் திரும்பி வருவதற்கும் உதவியாய் இருக்கும்” என்று கூறியுள்ளார்!