இந்திய கிரிக்கெட்

கம்பீர் என்னை தொடர் நாயகனாக செலக்ட் பண்ணது தப்பு.. அவர பண்ணி இருக்கணும் – புரூக் கருத்து

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் தன்னை தொடர் நாயகனாக தேர்ந்தெடுத்தது தவறானது எனவும் வேறு ஒரு வீரரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனவும் ஹாரி புரூக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் சமன் அடைந்த காரணத்தினால் இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் எதிரணியில் இருந்து தொடர் நாயகனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மெக்கலம் கில்லை தேர்வு செய்தால். கம்பீர் ஹாரி புரூக்கை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வித்தியாசம்

இந்தத் தொடரில் ஹாரி புரூக் 481 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜோ ரூட் 537 ரன்கள் எடுத்தார். மேலும் இவரை விட ஜோ ரூட் தாக்கம் தரக்கூடிய ரன்களை எடுத்திருந்தார். அவர் எடுத்த ரன்கள் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. மேலும் அவருடைய பங்களிப்புகள் நிலையானதாகவும் இருந்தது.

இது குறித்து ஹாரி புரூக் கூறும்பொழுது “நான் ஜோ ரூட்டை விட அதிக ரன்கள் எடுக்கவில்லை. அவரைத் தொடர் நாயகனாகவோ கோடை காலத்தில் சிறந்த வீரராகவோ தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த விருதுகளை அவர் பலமுறை வாங்கி இருக்கிறார்”

- Advertisement -

தோற்றதை நம்ப முடியவில்லை

“விரைவாக முடிந்த வரையில் அதிக கரங்கள் எடுப்பதே என்னுடைய சிந்தனை செயல்முறையாக இருந்தது. நானும் ரூட்டும் களத்தில் இருக்கும் பொழுது 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலையில் ஆட்டம் அங்கேயே முடிந்து விட்டது. நான் ஆட்டம் இழந்த பிறகு கூட ஆட்டம் முடிந்துவிட்டதுதான். இறுதியில் அது பலனளிக்காமல் போய்விட்டது”

இதையும் படிங்க : நாங்க தப்பு செஞ்சோம்னு கோச் கம்பீர் ஒத்துக்கணும்.. இதுக்கும் அவர்தான் பொறுப்பு – தினேஷ் கார்த்திக் பேட்டி

“அப்போது மிகவும் நம்பிக்கை உடன் இருந்தேன். இரண்டு ஓவர்களில் வேகமாக 30 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். நான் இதைச் செய்திருந்தால் ஆட்டம் அங்கேயே முடிந்திருக்கும். நான் வேகமாக ரன்கள் எடுப்பதை விரும்புகிறேன். ஆட்டத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை என்னுடைய சிந்தனை செயல்முறை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by