ஹர்திக் பாண்டியா இந்த விஷயத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் – முன்னாள் தேர்வு குழு தலைவர் அறிவுரை!

0
452

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான  இரண்டாவது  டி20 கிரிக்கெட் போட்டி  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்  நடைபெற இருக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி  இரண்டு ரண்கள் வித்தியாசத்தில்  பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது . இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர் . 162 ரண்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில்  இலங்கை அணியை 160 ரன்களில்  சுருட்டி வெற்றி பெற்றனர் .

இந்த போட்டியில்  ஹர்திக்  பாண்டியாவின்  கேப்டன்ஷிப் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது . இளம் அணியை நம்பிக்கை அளிக்கும் விதமாக  சிறப்பாக வழி நடத்தினார்  ஹர்திக்  பாண்டியா.

இந்திய அணியின் இளம் டிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  சஞ்சு சாம்சன் காயம் அடைந்துள்ள நிலையில்  அவருக்கு பதிலாக  ருத்ராஜ் கைக்வாட்  அல்லது ராகுல் திரிபாதி களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது . இந்திய அணியானது  இந்த போட்டியையும் வெற்றி பெற்று  இன்று தொடரைக் கைப்பற்று முனைப்பில் உள்ளது . இலங்கை அணி எப்படியாவது வெற்றி பெற்று இந்த தொடரை  சமன் செய்யப் போராடும் . இதனால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் .

இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும்  மற்றும் முன்னாள் தேர்வு குழு தலைவர்  சபா கரீம்  ஹர்திக் பாண்டியா கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று  எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து பேசி உள்ள சபா கரீம் ஹர்திக் பாண்டியா தன்னுடைய கவனம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரை ஒரு வீரராகவும்  தலைவராகவும்  எல்லோரும் விரும்புகிறார்கள். அவர் அணிக்கு  முதன்மை வீரராக இருந்து அணியை வழி நடத்துகிறார். எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் . போட்டிகளின் போது அவர்  தனது  உணர்ச்சி வெளிப்பாடுகளை  கட்டுப்படுத்தி  போட்டியில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்று  அறிவுறுத்தி இருக்கிறார் .

  ஹர்திக்  பாண்டியாவின்  கேப்டன்சி பற்றி பாராட்டி பேசிய  சபா கரீம் அவர் அணியை வழி நடத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அணியை கஷ்டமான சூழ்நிலைகளில் முன்னிறுத்தி  இது போன்ற போட்டிகளில் மூலம் பாடம் மற்றும் அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  அவரின் அந்த  செயல் மிகவும் கவர்ந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர்  அறிமுக பந்திவீச்சாளர்  சிவம் மாவிக்கு பவர் பிளே ஓவர்களில் பந்து வீச  அவரை அறிமுகப்படுத்தியதன் மூலம்  ஹர்திக் பாண்டியா ஒரு முன்னுதாரணமான கேப்டனாக  தன்னை ஆக்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.