” ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தக்கவைக்காத பொழுது… ” உண்மையை உடைக்கும் ரவி சாஸ்திரி

0
96
Ravi Shastri and Hardik Pandya

நடப்பு ஆண்டில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர் மெகா ஏலம் நடத்தப்பட்டே ஆரம்பிக்கப்பட்டது. கோவிட் தொற்றால் மெகா ஏலம் தள்ளி வைக்கப்பட்டு, இந்த ஆண்டு நடத்தப்பட்டது. மேலும் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால், பழைய எட்டு அணிகள் மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என நான்கு பேரை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்தப் பழைய எட்டு அணிகள் விடுவித்த வீரர்களில், இரண்டு இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை, தொடருக்குள் புதிதாக வந்த இரண்டு அணிகள் தேர்வுசெய்யவும் அனுமதிக்கப்பட்டது.

இதன்படி மும்பை அணி தனது முதல் வீரராக ரோகித் சர்மாவையும், இரண்டாவது வீரராக ஜஸ்ப்ரீட் பும்ராவையும், மூன்று, நான்காவது வீரர்களாகச் சூர்யகுமார் யாதவையும், கீரன் பொலார்டையும் தக்கவைத்தது. ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, இஷான் கிஷான், டிரன்ட் போல்ட் போன்ற மேலும் முக்கியமான வீரர்களில் யாரையும் மும்பை அணியால் தக்கவைக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததோடு கேப்டனாகவும் நியமித்தது. க்ரூணால் பாண்ட்யாவை மற்றொரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டிரன்ட் போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் வாங்கின. இஷான் கிஷானை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ விடாது மோதி 15 கோடிக்குப் போய் மும்பை அணி இறுதியில் வாங்கியது. இதனால் இந்த சீசனில் சில முக்கியமான வீரர்களை வாங்க முடியாமல் மும்பை அணி சிக்கலில் சிக்கி, தொடரிலும் சறுக்கி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு, கேப்டன்சியிலும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாப் பக்கத்திலும் மிகச்சிறப்பாக இருந்தது. 15 போட்டிகளில் ஆடிய அவர் 487 ரன்கள் குவித்தார். மேலும் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இறுதிபோட்டியில் ராஜஸ்தான் அணியின் மிக முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, குஜராத் அணியை சாம்பியனாக்கி, ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவை தக்க வைங்காதது குறித்துப் பேசியிருக்கிறார். அதில் அவர் “இது கடினமாக இருந்தது. மும்பையிடம் ரோகித், சூர்யா, ஹர்திக், பும்ரா, க்ரூணால் என ஐந்து பேர் இருந்தார்கள். அவர்களால் மூன்று பேரை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. இஷானை ஏலத்தில் போய் நேரடியாக எடுத்தார்கள். ஹர்திக் இதற்கு அதிர்ச்சி அடைப்திருப்பார். ஆனால் குஜராத் அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதும், இது அவருக்கு புதிய உலகத்தை அளித்தது. அவர் கேப்டன்சி, பேட்டிங், பவுலிங், பீல்டிங் மிகச்சிறப்பான முற்றிலும் மாறுபட்ட கிரிக்கெட்டை தந்தார்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணி ஐ.பி.எல் தொடரை வென்ற முதல் வருடமான 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை சாம்பியனான வரை ஏழு ஆண்டுகள் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் வெற்றிக்கரமான வீரராக இருந்திருக்கிறார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 1500க்கும் மேல் ரன்களையும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!