அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடமில்லையா – மும்பை அணி வெளியிட்ட செய்தி

0
123
Hardik Pandya IPL Auction

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுடன் இணைந்து புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் விளையாட இருக்கின்றன. அனைத்து அணிகளுக்கும் இந்த ஆண்டு இறுதியில் பிசிசிஐ தரப்பில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாகவே தங்களுக்கு விருப்பமான 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று பிசிசிஐ அன்மையில் கூறியது.

மற்ற பழைய அணிகள் அனைத்தும் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து ஏதேனும் மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 3 வீரர்கள் மாத்திரம் ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடமில்லை

மும்பை இந்தியன்ஸ் அணியில் நிச்சயமாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தங்க வைக்கப்படுவார்கள். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 3-வது வீரராக எந்த வீரர் அந்த அணி நிர்வாகத்தின் மூலமாக தக்கவைக்கப் படுவார் என்று விவாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றும் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த மூன்றாவது வீரர் கீரோன் பொல்லார்ட் என்று தெரியவந்துள்ளது. ஆரம்பம் முதல் இன்றுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆபத்பாந்தவனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கீரோன் பொல்லார்ட் விளையாடிக் கொண்டு வருகிறார். எனவே நிச்சயமாக அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக்கொள்ளும் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்தின் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா எதிர்பாராதவிதமாக அணியில் இருந்து நீக்கப்படுவார். இந்த கடினமான முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.

மீண்டும் மெகா ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்க முயற்சிக்கும் என்றும் ஒருபக்கம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். எனினும் ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் இடம் பெறுவாரா அல்லது மாட்டாரா என்பதை அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்த பின்னரே முடிவு செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -