IND vs AUS – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. மெயின் தலயே இல்ல!

0
5596

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. அதிரடி வீரர்கள் நிறைந்த ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்துவது என்பது சவாலான காரியம்.

- Advertisement -

இந்த நிலையில் தான் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரருமான கேப்டன் ரோகித் சர்மா தனது மச்சானின்  திருமணத்தில் பங்கேற்க உள்ளதால்,   முதல் ஒருநாள் போட்டியில் விளையாட  மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால்,
மும்பை போட்டியில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு   கேப்டனாக புரோமோஷன் கிடைத்துள்ளது.

இதே போன்று நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும், ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. எனினும் இதுவரை மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்தியா எந்த யுத்தியை பயன்படுத்தி மும்பையில் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ரோகித் சர்மா இல்லை என்றால் சுலபமான வழி, அவருக்கான மாற்று தொடக்க வீரர்   விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷனை களமிறக்குவதே ஆகும். இல்லையேனில் நான் வித்தியாசமாக தான் நொட்டுவேன் என்றால், கேஎல் ராகுலை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கலாம்.அப்படி செய்தால் அது இந்திய அணிக்கு இரண்டு வாய்ப்பை கொடுக்கும். ஒன்று அக்சர் பட்டேலை 3வது சுழற்பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கலாம்.

- Advertisement -

ஆனால், டெஸ்ட் போட்டியிலேயே 3வது ஸ்பின்னர் பெருமளவில் தேவைப்படாத நிலையில், ஒருநாள் போட்டிக்கா தேவைப்பட போகிறார்.மேலும் வான்கடே மைதானம், ஒரு பகுதியில் பவுண்டரி அளவின் தூரம் குறைவு. இதனால் 3 ஸ்பின்னர் திட்டம் சரி வராது. இதற்காக தான் சர்துல் தாக்கூரை அணியில் சேர்ப்பது நல்ல வாய்ப்பாக அமையும்.

இதன் மூலம் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்,ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா என 5 வேகப்பந்துவீச்சாளரும் மற்றும் ஜடேஜா, சாஹல்/குல்தீப் என 2 ஸ்பின்னரையும் பயன்படுத்தலாம். மீதம் 4 வீரர்களாக சுப்மன் கில், கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமாரை வைத்து கொள்ளலாம்.