இலங்கை ரசிகர்களின் மனதை வென்ற ஹர்திக் பாண்டியா – குவியும் பாராட்டுக்கள்

0
7171
Hardik Pandya Team India

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது . இதனை தொடர்ந்து டி-20 தொடர் இன்று தொடங்குகிறது . இதன் முதலாவது டி20 போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . போட்டி துவங்கும் முன்பு இரண்டு அணிகளின் தேசிய கீதம் ஒலிப்பது வழக்கமான ஒன்று.

டி20 உலகக்கோப்பை , ஒருநாள் உலகக்கோப்பை , மினி உலகக்கோப்பை என ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் போட்டிகளில் மட்டும் தேசியக்கீதம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டும். தற்போது அனைத்து விதமான தொடர்களிலும் பங்கேற்க்கும் அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிப்பரப்பு செய்யப்படும். இன்றைய போட்டியின் போது இலங்கை அணியின் தேசிய கீதம் ஒலிப்பரப்பும் பொழுது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இலங்கை அணியின் தேசிய கீதத்தை பாடியுள்ளார் . உடனே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது .

- Advertisement -
Hardik Pandya ODI

இதனை கண்ட இந்திய ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர் . இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இலங்கை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஹர்டிக் பாண்டியா என்று இலங்கை ரசிகர்களும் ஹர்டிக் பாண்டியாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர் . பின்னர் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் பிரித்திவி ஷா முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பரிக்கொடுக்க பிறகு சாம்சன் களமிறங்கி ரன்க்ச்ளை கணிசமான உயர்த்தினார .

சூரியகுமார் யாதவ் தனது அதிரடியான அரைசதத்தின் மூலம் இந்திய அணியை 164 ரன்கள் உயர்த்த உதவினார். இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களையும் அடித்தனர் . 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது . 10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி 64-3 எடுத்துள்ளது.கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.