குஜராத் அணிக்கு அது ஓகே, ஆனால் இந்திய அணியில் இந்த இடத்தில் தான் ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டும் – சுனில் கவாஸ்கர் அதிரடி

0
108

2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கைப்பற்றியது. ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் குஜராத் அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதுபோல ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக இவ்வளவு சிறப்பாக செயல்படுவார் என்று யாரும் யோசிக்க கூட இல்லை. ஆனால் இவை இரண்டும் மிக சிறப்பாக அரங்கேறியது.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராக..ஒரு ஆல்ரவுண்டர் வீரராக மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.இந்த சீசனில் 15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். அவருடைய ஐபிஎல் கேரியரில் மிக சிறப்பான சீசனாக இது அவருக்கு அமைந்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் இந்த இடத்தில்தான் அவர் விளையாடுவார்

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியில் இதற்கு முன்பு சற்றுக் கீழே இறங்கி பினிஷர் இடத்தில் விளையாடுவார். ஆனால் குஜராத் தனக்கு அவர் சற்று மேல் இறங்கி மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடியதை நாம் பார்த்தோம்.

இப்பொழுது அனைவர் மனதிலும் எழும் கேள்வி மீண்டும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் கீழே இறங்கி விளையாடுவாரா அல்லது குஜராத் அணிக்கு விளையாடியது போல் மேலே விளையாடுவாரா என்பதுதான். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது விளக்கத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா நிச்சயமாக இந்திய அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் விளையாடுவார். அதுதான் அவர் அட சரியான இடம் என்றும் கூறியுள்ளார். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் அவர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வலுப்படும் என்றும் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து 14 முதல் 20 ஓவர் வரை விளையாடினால் நிச்சயம் 100 முதல் 120 ரன்கள் குவிப்பார்கள். அதற்கு உரிய முழுத் திறமை மற்றும் ஆற்றல் இவர்களுக்கு உள்ளது. எனவே அந்த இரண்டு இடத்தில் இவர் விளையாடுவது தான் சரியாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.