அந்த கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுத்து தினேஷ் கார்த்திக்கை ஆட விட்டிருக்க வேண்டும் – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

0
368
Hardik Pandya and Ashish Nehra

ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இன்று இந்தத் தொடரின் முதல் ஆட்டம் டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா ஆடுகளத்தில் சில விரிசல்கள் இருப்பதால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்கும், சிறிய இடைவெளியில் ஹர்திக் பாண்ட்யாவும் இடம் பெற்றனர். தென்ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ரம் கோவிட்டால் பாதிக்கப்பட, புதுமுக வீரர் ஸ்ட்ரிஸ்டன் டப்ஸ் முதல் வாய்ப்பைப் பெற்றார்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் ருதுராஜ் ஜோடி 6.2 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்தது. ருதுராஜ் 15 பந்துகளில் 23 ரன்களை எடுத்து வெளியேற, அடுத்து இணைந்த இஷான் கிஷன் ஸ்ரேயாஷ் ஜோடி வேகமாக ரன் திரட்ட ஆரம்பித்தது. இந்த ஜோடி 80 ரன்கள் சேர்த்திருக்க, இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்களைகளையும், ஸ்ரேயாஷ் 27 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் ரிஷாப் பண்ட் 16 பந்துகளில் 29 ரன்களையும், ஹர்திக் அதிரடியாக இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களோடு பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்களையும் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் இந்திய அணி 211 ரன்களை குவித்தது. வேய்ன் பர்னால் நான்கு ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுதான், தென்ஆப்பிரிக்க பந்துவீச்சில் சிறந்ததாக அமைந்தது!

இந்த ஆட்டத்தில் ஆன்ட்ரிச் நோர்க்யா வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா அடிக்க, அது சிங்கிள் ரன் எடுப்பதற்குரிய அளவில் சென்றது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா எதிரில் இருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தராமல் தானே கடைசிப்பந்தை ஆடி அதில் இரண்டு ரன்கள் அடித்தார். இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா “அந்தப் பந்தில் ஹர்திக் பாண்ட்யா சிங்கிள் ரன் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் எதிரில் இருந்தது தினேஷ் கார்த்திக் நான் அல்ல” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்!

- Advertisement -