மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
179
Hardik Pandya

இந்தியாவின் தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி முன்பு போல பலமாக இல்லை என்றும் அதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றும் பலரும் இந்த தொடருக்கு முன்பு கருத்துகளை கூறி வந்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடந்த இந்த தொடரில் இந்திய அணியால் ஒரு போட்டியை கூட வெல்ல முடியவில்லை. மூன்று போட்டிகளிலும் மோசமாக தோல்வியுற்று ஒயிட் வாஷ் ஆகியுள்ளது இந்திய அணி. இதன் காரணமாக இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் சமூக வலைதளங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த தொடரில் இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடியதற்கு முக்கிய காரணம் அணியில் பகுதிநேர பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை என்பது தான். அதிலும் ஆல்-ரவுண்டராக இருப்பார் என்று எடுக்கப்பட்ட வெங்கடேஷுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச முதல் போட்டியில் ராகுல் தராததால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் பேட்டிங்கிலும் வெங்கடேஷ் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் ஹர்தித் அளவிற்கு இவர் இன்னமும் அனுபவம் பெறவில்லை என்று பலரும் கூறி வந்தனர்.

மேலும் ஹர்திக் காயத்தால் அணியில் இருந்து சென்ற பிறகுதான் அணி இவ்வளவு மோசமடைந்துள்ளது என்றும் இது தீரவேண்டும் என்றால் மீண்டும் ஹர்திக் அணியில் இணைய வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். தற்போது பலரும் எதிர்பார்த்தபடி மீண்டும் ஹர்திக் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்றும் அப்படி ஒருவேளை உடற்தகுதியை அவரால் முழுவதுமாக நிரூபிக்க முடியவில்லை என்றால் இலங்கை அணிக்கு எதிராக நடக்க இருக்கும் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வெறும் பேட்டிங் வீரராக மட்டுமே அணியில் இருந்து வந்த ஹர்திக் தற்போது மீண்டும் ஆல்-ரவுண்டராக களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக சரியான ஆல்ரவுண்டர் யாருமில்லை என்ற இந்திய அணியின் கவலையை இந்த செய்தி நிச்சயம் தீர்த்து வைக்கும் என்று ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர்.