“40 ரன் அடிக்கிறதுக்கு முன்னாடி, நான் என்னோட மனைவி, அண்ணன் கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு வந்தேன்” – ஹர்திக் பாண்டியா உருக்கமான பேட்டி!

0
2627

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு நான் இதெல்லாம் செய்தேன் என்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ளார் ஹார்திக் பாண்டியா.

கிரிக்கெட் உலகில் பிரசித்தி பெற்ற போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது.

- Advertisement -

விறுவிறுப்பிற்கு துளியும் பஞ்சம் இல்லாமல் ஆட்டத்தின் கடைசி பந்து வரை ரசிகர்களை உச்சபட்ச இதயத் துடிப்பிலும் சீட்டின் நுனியிலும் அமர வைத்த போட்டியாக அமைந்தது. இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹர்திக் பாண்டியா துரதிஷ்டவசமாக முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு விராட் கோலி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிதானமாக விளையாடி, இந்திய அணிக்கு கடைசி பந்தில் வெற்றியை பெற்றுத்தந்தார். ஹர்திக் பாண்டியா விளையாடிய விதம் சற்றும் குறைகூற முடியாது. அவர் இல்லை எனில் இது சாத்தியமில்லை என்றே கூறலாம்.

ஏனெனில் முக்கியமான கட்டத்தில் 37 பந்துகளில் 40 ரன்கள் அடித்துக் கொடுத்தார். விக்கெட் விடாமல் பார்த்துக்கொண்டார். மீதத்தை முன்னாள் கேப்டன் விராத் கோலி பார்த்துக்கொண்டார். இவர் 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத் தந்தார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பலரும் கண்ணீருடன் காணப்பட்டது நம்மால் வீடியோ காட்சிகளில் பார்க்க முடிந்தது. மேலும் இந்த வெற்றிக்கு பிறகு பிசிசிஐ ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலியிடம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டது.

பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஹர்திக் பாண்டியா பேசியதாவது

“தற்போது இந்திய அணியில் நான் இருக்கும் நிலைமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது நாட்டிற்காக நான் விளையாடுகிறேன் என ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் பொழுது எனக்குள்ளேயே பூரிப்பு நிகழ்கிறது. அந்த போட்டிக்கு முன்னர் எனக்குள் ஒரு உணர்வு இருந்தது. ஆகையால் இன்றைய போட்டியில் நான் விளையாடுவது உங்களுக்காக தான் என்று எனது மனைவி, சகோதரர் மற்றும் என் அண்ணனின் மனைவி ஆகியோருக்கு குறுஞ்செய்தியை அனுப்பினேன். இன்றைய போட்டியில் நான் விளையாடுவது மற்றும் நான் பெரும் பெருமை அனைத்தும் உங்களுக்காக தான் என்று கூறினேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். அந்த அளவிற்கு நன்றாக பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். நான் களமிறங்கிய சூழலில் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். எந்தவித உணர்வையும் உள்ளுக்குள்ளே எடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்திருந்தேன். ஆகையால் என்னால் எந்தவித கலங்கமும் இன்றி முழு கவனத்துடன் விளையாட முடிந்தது.” என்று உணர்வுபூர்வமாக பேசினார்.