கிரிக்கெட்

சிறிது நாட்களுக்கு தன்னை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் – தேர்வு குழுவிடம் ஹர்திக் பாண்டியா வேண்டுகோள்

ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இந்த ஆண்டு மீண்டும் விளையாடத் தொடங்கி இருக்கிறார். அவரது உடல்நிலை பழையபடி இயல்புக்கு வர சுமார் ஒன்றரை வருட காலம் இடைவெளி தேவைப்பட்டது. தற்போது மீண்டும் இந்திய அணியில் டி20 போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ள அவர் பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

- Advertisement -

முதுகுத்தண்டுவடத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை. முன்பு போல அவர் ஃபிட்டாக இல்லை என்ற காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியிலும் அவரது பெயர் தவிர்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் முன்பு போல அவர் பந்து வீச தயாராக இல்லை.

என்னுடைய ஃபிட்னஸ்ஸில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்

இந்நிலையில் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அவரது வெங்கடேஷ் ஐயர் விளையாட வைக்கப்பட்டார். ஒரு முழு ஆல்ரவுண்டர் வீரராக இனி மீண்டும் அவர் விளையாட தொடங்கினால் மட்டுமே, அவருக்கான இடம் திரும்ப கிடைக்கும் என்று பிசிசிஐ தரப்பிலிம் கூறப்பட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தாமாக முன்வந்து தன்னை சிறிது காலம் எந்தவித போட்டியிலும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நான் மீண்டும் பழையபடி பந்துவீசும் அளவுக்கு தயாராகி வருகிறேன். என்னுடைய உடல் தகுதியை பழையபடி மீட்டெடுக்க எனக்கு சில கால அவகாசம் தேவை. எனவே இனி சிறிது நாட்கள் என்னை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு மிகவும் சரி என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி மீண்டும் பழையபடி அதிரடி ஆல்ரவுண்டர் வீரராக அவர் மீண்டு வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை அவருடைய டுவிட்டர் பேஸ்புக் பக்கங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by