ஹர்திக் பாண்டியா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ.. பிரகாசம் ஆகும் ஐபிஎல் 2024-ல் பங்கேற்கும் வாய்ப்பு

0
3460

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வரும் சீசனில் யார் இருக்கப் போகிறார்? என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கி, சச்சினை மையமாக வைத்து அணியைக் கட்டமைத்தார்.

- Advertisement -

சச்சினின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அவர்களால் 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் சீசன் வரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வாங்க முடியவில்லை. இதில் 2010 ஆம் ஆண்டு அவர்கள் சிஎஸ்கேவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவினர்.

உலகக் கோப்பைக்கு சச்சின் டெண்டுல்கர் ஏங்கியது போல், ஐபிஎல் கோப்பைக்கு மும்பை அணி ஏங்க வேண்டுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்தான் 2013 ஆம் ஆண்டு அணிக்குள் வந்த ரோகித் சர்மா பிரமாதமாக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தன்னுடைய அபாரமான கேப்டன்சி ஸ்டைல் மற்றும் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் 5 கோப்பைகளை வென்று தந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் காட்பாதர் ரேஞ்சுக்கு ரோகித் சர்மா உயர்த்தப்பட்டார். ஆனால் கடந்த மூன்று சீசன்களாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியால் ஒருமுறை மட்டும்தான் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடிந்தது.

- Advertisement -

அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடமிருந்து வாங்கி கேப்டனாக ஆக்கியது. இது ரோகித் சர்மா ரசிகர்களை வெறுப்படைய செய்தது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து விட்டதாகச் செய்தி வெளியானதால் மீண்டும் ரோகித் சர்மாதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ஹர்திக் பாண்டியா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐபிஎல் போட்டிக்கு எந்த வகையில் தயாராகிறேன் என்பதைக் காட்டும் விதமாக அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் அவர் ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு முன்பே உடல் தகுதியை எட்டி கிரிக்கெட் களத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.