15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை வாங்கியது அகமதாபாத் அணி ; தக்க வைத்துக் கொள்ளும் 3 வீரர்கள் பட்டியல் வெளியீடு

0
3778
Hardik Pandya Ahmedabad IPL Team Captain

15ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு கோலாகலமாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. கடந்த 2 ஐபிஎல் தொடர்கள் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தேர்ந்து எடுக்கப் போகும் 3 வீரர்கள் யார் என்பது தற்போது வரை கேள்வி குறியாகவே உள்ளது.

மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக மற்ற அணிகள் அனைத்தும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட 3 வீரர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை.

ஆனால் அந்த அணி தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே தற்பொழுது அகமதாபாத் அணி தேர்வு செய்யப் போகும் மூன்று வீரர்கள் குறித்த ரகசியமான அப்டேட் கிடைத்துள்ளது.

அகமதாபாத் அணி கைப்பற்ற போகும் மூன்று வீரர்கள்

அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஹர்திக் பாண்டியா மற்றும் ஹைதராபாத் அணி வீரரான ரஷீத் கான் ஆகியோரை 15 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது. அதேபோல கொல்கத்தா வீரர் சுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 90 கோடி ரூபாய் கையிருப்பு தொகையாக அந்த அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மேற்கூறிய மூன்று வீரர்களுக்கு அந்த அணி மொத்தமாக 37 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது. ஆக மீதமுள்ள ஐம்பத்தி மூன்று கோடி ரூபாயுடன் அந்த அணி அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறது.

அகமதாபாத் அணியை தேர்வு செய்துள்ள வீரர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் இருவருமே நிறைய டி20 போட்டிகளில் விளையாடிய திறமைசாலிகள். இவர்களுடைய அதிரடியான ஆல் ரவுண்டிங் ஆட்டம் அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும். அதேபோல ஓபனிங் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் சிறப்பான துவக்கத்தை அந்த அணிக்கு ஏற்படுத்திக் கொடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மூன்று சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ள அந்த அணி, இனி தேவையான மற்ற எந்தெந்த வீரர்களை மெகா ஏலத்தில் கைப்பற்றப் போகிறது என்பதை அடுத்த மாதம் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.