ஹர்திக் பாண்டியா ரொம்ப நல்லா விளையாடினார். ஆனால்…; ஜோஸ் பட்லர் கருத்து!

0
1516
Butler

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது அரையிறுதி போட்டிகளை முடித்துக்கொண்டு இறுதிப் போட்டிக்கு தயாராகி இருக்கிறது!

நேற்று சிட்னி மைதானத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான அணி அபார வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

- Advertisement -

இன்று அடிலைடு மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீசியது!

முதலில் பேட் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோரது அரை சதங்களால் 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் அடில் ரசித் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரும் தலா 80, 86
ரன்களை ஆட்டம் இழக்காமல் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்து இறுதி போட்டிக்கு கூட்டிச் சென்றனர்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முடிவுக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ” அயர்லாந்து போட்டிக்கு பின் நீண்ட நாட்கள் கழித்து எங்கள் அணி வீரர்கள் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் மற்றும் செயல்பாடு மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் மிக உற்சாகமாக இங்கு உள்ளே வந்தோம். இங்கு வந்த பொழுது எங்களுக்கு ஒரு நல்ல உணர்வு இருந்தது. இந்த வெற்றி எங்களின் முதல் வீரர் மற்றும் கடைசி வீரர் வரை அளித்த பங்களிப்பால் வந்தது” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய ஜாஸ் பட்லர்
” நாங்கள் எப்பொழுதும் ஆட்டத்தை தைரியமாக அதிரடியாக துவங்கவே விரும்புகிறோம். இன்று அடில் ரசீது நம்பர் 11 இல் இருந்தார். இந்த பேட்டிங் ஆழம் எங்களுக்கு அதிரடியாக விளையாடுவதற்கு சரியாக இருந்தது. அலெக்ஸ்க்கு பந்து வீசுவது என்ற கடினமாக இருந்தது. அவர் இன்று என்னுடைய மிகச் சிறந்த பார்ட்னராக இருந்தார். மைதானத்தின் சிறிய பக்கங்களை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இன்று முதன்முறையாக ஆட்டத்திற்குள் வந்த ஜோர்டானுக்கு எனது பாராட்டுக்கள். அவர் இதுவரை ஆடவில்லை. இன்று ஹர்திக் பாண்டியா இறுதியில் மிகச் சிறப்பான ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். ஆனால் அவரை ஜோடான் சரியாகவே கட்டுப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறி முடித்துக் கொண்டார்!