டி20 கேப்டனாக இனிமேல் நீங்களே இருங்கன்னு சொன்ன இருப்பீங்களா? ; ஹர்திக் பாண்டியா கொடுத்த மாஸ் பதில்!!

0
1391

இனிமேல் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நீங்களே இருங்கள் என்று சொன்னால் தொடர்ந்து நீடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை நான்கு போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி ஆகஸ்டு 7ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.

துவக்க வீரர்களாக இசான் கிசான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் களமிறங்கினர். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 64 ரன்கள், தீபக் ஹூடா 38 ரன்கள் ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் அடிக்க 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 எண்கள் அடித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின. ஹெட்மயர் அதிகபட்சமாக 56 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து, 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி சந்தித்தது. இதன் மூலம் டி20 தொடரை 4-1 என்ற கணத்தில் இந்திய அணி கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:

“அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தது மிகச் சிறப்பானதாக இருக்கிறது. மேலும் கேப்டன் பொறுப்பில் இருப்பது கூடுதல் சிறப்பையும் கொடுக்கிறது. தொடர்ந்து கேப்டன் பொறுப்பை கொடுத்தால் நிச்சயமாக நான் ஏன் வேண்டாம் என்று சொல்வேன். மகிழ்ச்சியுடன் அதை ஏற்று இந்திய அணிக்காக செயல்படுவேன். அடுத்ததாக உலகக்கோப்பை வரவிருக்கிறது. இந்திய அணி சிறப்பான அணியாக உருவாக்கி வருகிறது. தற்போது இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் மற்றும் சுதந்திரம் முன்பை விட அதிகமாக கிடைப்பதால் நன்றாக செயல்படவும் முடிகிறது. சுதந்திரத்தின் மூலம் வீரர்கள் எந்த ஒரு தோல்வியையும் கண்டு பயம் கொள்ளாமல் சிறப்பாக களமிறங்கி அதிகபட்ச பங்களிப்பை கொடுத்து வருவது வெற்றி தோல்வி மூலக தெரிந்து விடுகிறது.” சென்றார்

மேலும் பேசிய அவர், “இன்றைய போட்டியில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி துவக்கம் முதலே கட்டுக்கோப்பில் வைத்திருந்தார். பவர்-பிளே ஓவர்களில் அக்சர் இடம் பந்துவீச கொடுத்தது நல்ல முடிவாக அமைந்தது. ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் விக்கெட்களையும் வீழ்த்தக்கூடிய அவரை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. உலக கோப்பைக்கு முன்பாக ஒவ்வொரு வீரர்களும் மிகச்சிறப்பாக தயாராகி வருகின்றோம். எப்போதும் கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை என்றால் அவ்வளவு எளிதில் உங்களை தோற்கடிக்க இயலாது என நான் நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு பாடம்.” என்றார்.