நடுவரின் தவறான முடிவால் ஆட்டம் இழந்த ஹர்திக் பாண்டியா! வீடியோ இணைப்பு !

0
245

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்துக் கொடுத்தனர் .

அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 34 ரன்கள் ஆட்டம் இழந்தார் அவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் இசான் கிசான் ஆகியோர் முறையை 8 மற்றும் ஐந்து ரன்கள் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

சுப்மன் கில்லுடன் இணைந்த சூரியகுமார் யாதவ் நான்காவது விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 ரண்களில் ஆடிக் கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் ஆட்டம் டேரில் மிச்சல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் .

இவரும் ஹர்திக் பாண்டியாவும் ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்தியா அணிக்கு சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர் . நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா டேரில் மிச்சல் வீசிய 39.4 வது பந்தில் கிளீன் போல்ட் ஆனதாக மூன்றாவது நடுவர் அறிவித்தார் . ஆனால் ரிப்ளேக்களில் பார்க்கும் போது விக்கெட் கீப்பரின் கையுறை பட்டு தான் பைல்ஸ் ஸ்டம்பிலிருந்து விலகியது நன்றாக தெரிந்தது . இதனால் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டம் இழந்தார் ஹர்திக் பாண்டியா . அவர் 38 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார் . இதில் மூன்று பவுண்டரிகள் அடக்கம். இந்த ஆட்டமிழப்பின் வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

தற்போது வரை இந்திய அணி 48 ஓவர்களில் 324 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது . சுப்மன் கில் 188 ரன்கள்டனும் குல்தீப் யாதவ் 2 ரண்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -