இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெற்றிகரமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன் டிராபி தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று வருகிற இரண்டாம் தேதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய ஆல்ரவுண்டர் குறித்து தனது சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் சிறந்த வீரர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் குவிக்க, அதை எதிர்த்து விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தால் 42 ஓவர்களில் 244 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் ஓரளவு நல்ல தொடக்கத்தை ஆரம்பித்த நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆல் ரவுண்டர் ஹரதிக் பாண்டியா பாபர் அசாமின் விக்கட்டை சாய்ந்தார்.
அவரது விக்கெட் நன்றாக செல்ல ஆரம்பித்த பாகிஸ்தான் அணி ரன் வேகத்தை அப்படியே தகர்த்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய புள்ளி விவரங்களை காட்டி, பந்துவீச்சில் பல ஜாம்பவான் வீரர்கள் இருந்த போதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாண்டிய தான் பந்துவீச்சில் அசத்துகிறார் என்று சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி மீது கோபம்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது ” ஐசிசி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர் யார் என்று கேட்டால் உங்களுக்கு ப்ரட்லீ, ஜாகீர் கான், மலிங்கா மெக்ராத், ஸ்டார்க் போன்ற பெரிய பெயர்கள் நினைவுக்கு வரும். அதை அப்படியே ரத்து செய்யுங்கள். அதற்குக் காரணம் ஹர்திக் பாண்டியா தான். இது மனதை மரத்து போக செய்யும் ஒரு புள்ளிவிவரமாகும். பாண்டியா இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடல.. அதனால இந்தியாவில் இதை செய்வதே என் திட்டம் – பேட் கம்மின்ஸ் பேட்டி
ஸ்டார்க் 11 விக்கெட்டுகள், நெஹ்ரா 10 விக்கெட்டுகள் மற்றும் ஜடேஜா இர்பான் பதான் ஆகியோர் தலா 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி ஏதோ தவறு செய்துள்ளது அதை பார்த்து ஹர்திக் பாண்டியா மிகவும் கோபப்படுகிறார். இது பாகிஸ்தான் அணியை பற்றியது மட்டுமல்ல கடந்த டி20 உலக கோப்பையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி திறப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது பாண்டியா தான். மேலும் மில்லர் விக்கட்டை வீழ்த்தியதும் அவர்தான். அவர் எப்போதுமே ஒரு சிறந்த வீரர்”என்று பேசி இருக்கிறார். இந்த பட்டியலில் பும்ரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






