மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியா இதைச் செய்ய வேண்டும் – பிசிசிஐ திட்டவட்டம்

0
220
Hardik Pandya and BCCI Selection Committee

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியுற்றாலும் சொந்த நாட்டில் நடந்த 3 டி20 போட்டிகளையும் சிறப்பாக விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித்துக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. வரிசையாக இந்திய அணி வீரர்கள் அதிகமான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்ததால் பல சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீப காலத்தில் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காவிட்டாலும் அவர் பெயரும் இந்த தொடரில் விளையாட வீரர்கள் மத்தியில் இடம் பெறவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா அவருக்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த வலியிலிருந்து மீண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பிய அவர் ஐபிஎல் உட்பட பல ஆட்டங்களைப் அந்த வீசாமல் பேட்டிங் வீரராக மட்டுமே விளையாடி வந்தார். பேட்டிங் வீரராகவும் அவரது ஆட்டம் முன்புபோல சிறப்பானதாக அமையவில்லை. இதன் காரணமாக உலக கோப்பை தொடரின் போது அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருந்தபோது அந்த அணியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. மற்ற சீனியர் வீரர்களை போல ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று பலர் நினைத்தபோது பிசிசிஐ தற்போது வேறு ஒரு பதிலை கொடுத்துள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா இனிமேல் அனைத்து திரும்ப வேண்டும் என்றால் தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டராக இழுத்துக்கொண்டே பேட்டிங் படித்தால் மட்டும் போதாது, பந்துவீச்சும் அவசியம் என்பதால் பெங்களூருக்குச் சென்று நேஷனல் கிரிகெட் அகாடமியில் தனது உடற் தகுதியை அவர் நிரூபித்தால் மட்டுமே வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்துள்ள நிலையில் அவர் தனது வருங்கால கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்