இன்று இந்திய அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு வந்ததற்கு இந்த ஒரு முடி வேகாரணம் – 7 மாதத்திற்கு முன் தான் எடுத்த முடிவை விவரிக்கும் ஹர்திக் பாண்டியா

0
55

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடியது. குஜராத் தலையை மிக சிறப்பாக வழிநடத்தி அதே சமயம் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய அணியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 12 பந்துகளில் 30* ரன்கள், மூன்றாவது போட்டியில் 21 பந்துகளில் 31* ரன்கள் அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது போட்டியில் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

இந்திய அணியை வழிநடத்த தயாராக இருக்கும் ஹர்திக் பாண்டியா

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது இதனை அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இம்மாத இறுதியில் விளையாட இருக்கிறது.

அந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட போகிறது.

கடந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா சுமாராக விளையாடுகிறார். பின்னர் இந்திய நிர்வாகத்திடம் தனக்கு ஓய்வு தேவை என்று கூறி சுமார் ஐந்து மாத காலம் ஓய்வு எடுத்தார். அதன்பின்னர் குஜராத் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்றார்.

இவ்வளவு மாற்றங்கள் நடந்ததற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன எந்த முடிவு உங்களை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளது என்ற கேள்வி அவரிடம் எடுத்து வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கான பதிலை ஹர்திக் பாண்டியா நம்மிடம் தெரிவித்துள்ளார்.

சரியான மனநிலையையும் கடின உழைப்பும் இருந்தால் போதும்

உங்களுடைய மனதை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சரியான மனநிலையில், தொடர்ந்து நீங்கள் கடினமாக உழைத்தால் சாத்தியப்படாத விஷயம் என்று எதுவும் இல்லை. இந்த இரண்டும் தான் என்னுடைய இந்த மாற்றத்திற்கு காரணம். 7 மாதத்திற்கு முன்பு நான் எடுத்த முடிவு இன்று என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடருக்கு முன்பாக, இதற்குப் பின் இந்திய அணியை வழிநடத்த போகிறேன் என்கிற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் நம்மிடம் கூறியுள்ளார்.

ஜூன் 26 மற்றும் 28 அன்று இந்திய மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.