“எல்லாம் முன்கூட்டி அவரே செய்து வைத்துவிட்டார்” – ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்

0
97
Hardik pandya

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்து உள்நாட்டில் தென் ஆபிரிக்க அணியோடும், அடுத்தது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தது. அயர்லாந்து உடனான இருபது-20 தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

அடுத்து இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியோடு இங்கிலாந்தில் ரோகித் சர்மா தலைமையில் மோதியது. இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது.

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் சென்ற இந்திய அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் எதிர்கொண்டது. இதில் 3-0 எனத் தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து ரோகித் சர்மா தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியோடு மோதியது. இதில் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடந்தது. கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் இல் நடந்த முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.

இதற்கடுத்து அமெரிக்காவில் நடந்த நான்காவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் வென்று தொடரை கைப்பற்றியிருந்தது இந்திய அணி. நேற்று தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நடந்தது. இந்தப் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுத்தார. அதனால் தற்காலிக கேப்டனாக, அயர்லாந்து டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் இந்த ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மிக எளிமையாக இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து டி20 தொடரை 4-1 எனக் கைப்பற்றியது!

தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றிருந்த ஹர்திக் பாண்டியாவிடம், கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் ” நாட்டிற்காக அணியை வழிநடத்துவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமே. அணி வெற்றி பெறுவதற்கு நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். இந்தப் போட்டிக்கு முன்பாக அணிக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக செய்து வைத்திருந்தார். நான் அதை அப்படியே தொடர்வதற்கு மட்டுமே செய்தேன். என் பங்கு என்பது இதில் ஏதும் பெரிதாக கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்!

அயர்லாந்து இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என மிக நீண்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த இந்திய அணி தற்பொழுது இந்தச் சுற்றுப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறது. இதற்கடுத்து ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. இதற்கு நடுவில் ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய வீரர்கள் கொண்ட ஒரு அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!