ஜடேஜா ஹர்திக் இல்லை.. இந்த பாகிஸ்தான் வீரர்தான் ஆசியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் – இந்திய முன்னாள் வீரர் தைரியமான பேச்சு!

0
1028
Jadeja

இன்று 16வது ஆசிய கோப்பை தொடர் ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துவங்குகிறது. முதல் போட்டியில் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன!

நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கு பெறும் அணிகளை எடுத்துக் கொண்டால், பாகிஸ்தான் அணி மிகவும் செட்டில்ட் ஆன அணியாக இருக்கிறது. அந்த அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது தெளிவான ஒன்றாக இருக்கிறது. போலவே இடம்பெறும் வீரர்கள் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பதும் தெளிவாக இருக்கிறது.

- Advertisement -

சர்பராஸ் அகமத் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு பாபர் ஆஸம் கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்ட பின், பாகிஸ்தான் அணி கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீண்டு, தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து, இன்று ஒரு நிலையான சம பலம் கொண்ட அணியாக உருவாகி இருக்கிறது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடுவதும், மேலும் பெரிய அணிகள் கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுவதும், அவர்களுடைய சர்வதேச கிரிக்கெட் மட்டும் இல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டையும் பலமாக்கி இருக்கிறது.

பாகிஸ்தான் அணி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “பாகிஸ்தான் மிகவும் செட்டில் செய்யப்பட்ட அணி. அந்த அணியில் மாற்றங்களுக்கு அதிக வாய்ப்பு இல்லை. அது தேவையும் இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கொந்தளிப்பான ஒரு காலம் இருந்தது. ஒரு கட்டத்தில் பத்து கேப்டன்கள் அணியில் இருந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை.

- Advertisement -

பாகிஸ்தானின் பலம் என்னவென்றால் அவர்கள் பேட்டிங் யூனிட்டில் முதல் மூன்று வீரர்கள் மற்றும் அவர்களின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. அதுதான் அவர்களது அணியை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களிடம் சிறந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஷாகின், ஹாரிஸ், நசீம் சிறந்த பந்துவீச்சாளர்கள். சதாப் கான் ஆசியாவிலேயே சிறந்த ஆல்ரவுண்டர்.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமானுக்கு சுழற் பந்துவீச்சில் சில பிரச்சனைகள் இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஒரு சிறு பிரச்சனை இருக்கிறது. இறுதியாக இப்திகார் அகமது வருகிறார். இதுதான் அவர்களுடைய பலவீனமாக இருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!