கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன், அடுத்த வாரத்தில் முடிவை எட்டும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றிருக்கும் பத்து அணிகளில், எந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை இந்த முறை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 19 புள்ளிகள் எடுத்ததின் மூலமாக, முதல் இரண்டு இடங்களில் இடம்பெறுவதை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும்.
இதற்கு அடுத்த இடத்தில் தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருந்து வருகிறது. அந்த அணி தமக்கு இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலே, புள்ளி பட்டியலில் எப்படியும் இரண்டாவது இடத்தை பிடித்து விடும் வாய்ப்பில் இருக்கிறது. எனவே இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்து ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகள் எடுத்து இருக்கும் நிலையில், அந்த அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது நான்காவது இடத்திற்கு அதிகபட்ச வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு இருக்கிறது. ஆர்சிபி அணியை வென்றால் தகுதி பெற்று விடும். அதே சமயத்தில் இதற்கு அடுத்த இடத்தில் லக்னோ, அடுத்து ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் வாய்ப்பில் இருக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்பது குறித்து பேசிய ஹர்பஜன்சிங் “கொல்கத்தா அணிக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அணி சிறப்பாக இருக்கிறது. அந்த அணி மிகவும் சமநிலையான ஒரு அணி, குறைகள் என்று எதுவும் கிடையாது. பந்துவீச்சில் சுழல் மற்றும் வேகம் என சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் தொடக்க இடம், மிடில் வரிசை மற்றும் பினிஷிங் சிறப்பாக இருக்கிறது. ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : டிவிலியர்ஸ் பீட்டர்சன் இதுல சாதிச்சது என்ன.. நீங்க ஹர்திக்கை பத்தி பேசலாமா? – கவுதம் கம்பீர் விமர்சனம்
கொல்கத்தா அணியிடம் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் எதிரணிக்கு ஒரு நல்ல நாள் இருக்க வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்றாக இருந்திருக்கிறது. அவர்கள் பயங்கரமான கிரிக்கெட் விளையாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.